வானுலகை விஞ்சிடும் வேத பூமி பாரதம்
வாழ்வெலாம் அளித்திவர் புகழ் வளர்க்க ஏகுவோம்
வானுலகை விஞ்சிடும் வேதபூமி பாரதம்
எங்கெங்கும் திருக்கோயில் புனிதநீர் திருத்தலம்
செங்குருதி சிந்தி வீரர் தூய்மை காத்த திருவிடம்
தர்மபூமி பாரதம் கர்மபூமி பாரதம்
சுதந்திரத்துடன் ஸ்வதர்மம் காத்து என்றும் வாழுவோம்
எங்கள் மண்ணில் உரிமை கோரி உலகனைத்தும் கூடினும்
எங்கள் தாயைத் தீண்ட எண்ணி கோடி சேவை சூழினும்
ஒரு சிறிதும் அஞ்சிடோம்;ஓரணுவும் மண் கொடோம்;
ஒரு குழந்தை உள்ளவரை போர்க்கொடி பறந்திடும்.
பாரதப்பண்பாட்டைப் பாதுகாப்போம்;பரப்புவோம்;இதன்மூலமாக மனிதகுலத்தின் வக்கிர & போர்வெறியை தணித்து,அமைதியான உலகை உருவாக்குவோம்.
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது;அதிலும் கூன்,குருடு,செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது;
புல்லாய்ப் பிரக்கினும் பாரதத்தில் பிறத்தல் அரிது என பெரியோர்கள் கூறியுள்ளனர்.
இந்துதர்மத்தின் சிறப்புகள்,விஞ்ஞான தத்துவங்கள்,உண்மை வரலாறுகள் சிறந்தோங்கிய நமது பண்பாடு,நமது வாழ்க்கை முறைகள்,பெண்களுக்கு அளிக்கப்படும்முக்கியத்துவம்,அனைத்தையும்(நதி,கோவில்,மரம்,காடு,இறந்த முன்னோர்கள்) தாயாகப் போற்றுகிற மரபு,நமது கலைகளான பரதம்,தப்பாட்டம்,கும்மிப்பாட்டு,கோலாட்டம்,சிலம்பாட்டம், கபடி,களரி,வர்மக்கலை;மற்றும் மதச் சுதந்திரம் இவற்றால் கவரப்பட்டு உலகமே நம்மை நோக்கி வரத்துவங்கியிருக்கிறது.இதிகாசங்களும்,புராணங்களும் விஞ்ஞானபூர்வமான உண்மைகளை தன்னுள் புதைத்து வைத்திருப்பதை மேல்நாட்டு இந்துவியலாளர்கள் கண்டறிந்துகொண்டே இருக்கின்றனர்.உலகம் முழுவதும்,ஐந்து கண்டங்களிலும்,200 நாடுகளிலுமிருந்து பல தரப்பட்ட அறிஞர்கள்,சிந்தனையாளர்கள்,விஞ்ஞானிகள் நமது இந்துதர்மத்தின் தத்துவங்களாலும்,கோட்பாடுகளாலும்,மனித நல செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு அதனுள் பொதிந்திருக்கும் ஆன்மீக அமுதங்களை அள்ளிப்பருக பாரதம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.(நாம் தான் அமெரிக்கா செல்வதைப் பெருமையாக நினைக்கிறோம்;உலக நாடுகள் பலவற்றின் மக்கள்,மேதைகள் பாரதம் வருவதையும்,பாரதப்பண்பாடான இந்துப்பண்பாட்டையும் அறிவதை தனது பிறவிநோக்கமாக நினைக்க ஆரம்பித்துள்ளனர்)
இருப்பினும்,பாரத நாட்டுமக்கள் தனது சொந்த தர்மமான இந்து தர்மத்தை விட்டு,வேறு மதத்திற்கு மாற்றப்படுவது படுவேகமாக நடந்துவருகிறது.வறுமையில் இருப்பவர்களுக்கு மூன்று வேளை சோறு போட்டும்,படித்த வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை வாங்கித் தந்தும்,நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் செய்து குணப்படுத்துவதாலும்;வீடில்லாதவர்களுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுத்தும் மதமாற்றம் பேய்வேகத்தில் நடக்கிறது.இந்து தர்மத்தை முழுமையாக அறியாமல் தடுத்த மெக்காலேவின் நரித்தனத்தால் 99% இந்துக்களுக்கு இந்துதர்மத்தின் பெருமைகள் தெரியவில்லை;இதனால்தான் இன்று நம்மை ஆள்பவர்கள்,நம்மைச் சுரண்டுவதில் கிறிஸ்தவ ஆங்கிலேயனை விட பலமடங்கு முன்னேறிவிட்டார்கள்.புதிதாக மதம் மாறுபவர்களின் மனநிலையானது,இந்து தர்மத்தை அழிப்பதில் வெகுவான ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.பிரச்னைகளை எதிர்கொள்ளும் பலவித டெக்னிக்குகள் இந்து தர்மத்தின் புராணங்கள்,உபநிஷத்துக்கள்,கதைகளில் இருக்கின்றன.அவைகளை பரவவிடாமல் தடுப்பதை தனது அரசியல் லட்சியங்களாக அனைத்து இந்திய அரசியல் கட்சிகளும் கொண்டுள்ளன.(விதிவிலக்காக சில அரசியல்கட்சிகளால் தான் இந்து தர்மம் இந்தளவுக்காவது நிம்மதியாக வாழ்கிறது).இதனால் பிரச்னைகளை எதிர்கொள்ளமுடியாமல் தவிப்பவர்கள்,சிறைக்கைதிகள் முதல் விபச்சாரிகள் போன்றோரை பொய்யான,பகட்டான வார்த்தைகளைச் சொல்லி,மெஸ்மரிசம் எனும் மனமயக்கத்தைச் செய்தும்,ஏமாற்றியும்,வெளிநாட்டு டாலர்களைக் காட்டியும் மதமாற்றிவருகின்றனர்.நமது பாரதத்தை கிறிஸ்துவ நாடாக மாற்றவேண்டும் என்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பல கோடி டாலர்கள் வசூலிக்கப்பட்டுவருகின்றன.
இந்துக்களில் 99% பேர்களுக்கு ஆன்மீக அடிப்படைக்கல்வி கிடைக்கவில்லை;இந்து தர்மத்தின்மீது நிஜமான பற்றும்,பக்தியும்,நம்பிக்கையும் இருக்கும் விதத்தில் ஆன்மீக அடிப்படைக் கல்வி தரவில்லை;நமது கோவில்களை தன்பிடியில் வைத்துள்ள அரசாங்கம்,கோவில்களில் இந்துதர்மக் கல்வியைத் தர நடவடிக்கை எடுக்கவில்லை;(மாறாக கோவில் உண்டியல் வசூலை அரசு ஊழியர்களுக்குச் சம்பளமாகத் தருகிறது.இது எப்பேர்ப்பட்ட பாவம்!)
பெண்களாகிய நாம் நமது குழந்தைகளுக்கும்,சிறுவர்களுக்கும்,மாணவ மாணவிகளுக்கும் இந்து சமயக்கல்வியைப் புகட்ட முயல வேண்டும்.நமது வீடுகளில்,தெருக்களில்,கோவில்களில் நாமாவளி,பஜனை,கூட்டு வழிபாடு மன்றங்களைத் துவக்குவோம்;தேசபக்தியும் தெய்வபக்தியும் வளர்க்கும் கதைகளைச் சொல்லிக் கொடுப்போம்;எல்லாப்பகுதிகளிலும் பெண்களை ஒன்றிணைத்து திருவிளக்குப் பூஜைகளைச் செய்வோம்; இந்து தர்மத்தின் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டியது இவை மட்டுமே!!!
குடும்பத்துடன் வாரம் ஒருமுறை கோவிலுக்குச் செல்லும் பழக்கத்தை கைவிடாமல் பார்த்துக்கொள்வோம்;
ஆர்.எஸ்.எஸ்.,இந்துமுன்னணி,சின்மயா மிஷன்,ஸ்ரீராமக்ருஷ்ண மிஷன்,ஆதினங்கள்,மேல்மருவத்தூர் வார வழிபாட்டு மன்றங்கள் முதலான 3000 இந்துஇயக்கங்களில் ஏதாவது ஒன்றுடன் மட்டுமாவது இணைந்து நமது இந்துதர்மத்துக்குச் சேவை செய்வோம்;
ஓம்சிவசிவஓம் நன்றிகள் - குருநாதர்
அற்புதம்
ReplyDelete