சிவராத்திரி அன்று இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்து விசேச வழிபாடுகளுடன் காணப்படும். அந்நாளில் கோவிலுக்கு செல்லும் பொழுது ருத்ராட்சங்கள் இரண்டு கையில் எடுத்துக் கொண்டு சென்று கோவிலை பனிரண்டு முறை ஓம் சிவ சிவ ஓம் என்று சொல்லியவாறு வளம் வரவும். கவனம் சிதறாமல் உங்கள் நியாயமான கோரிக்கைகளை இறைவனிடம் கூறுங்கள், சில நாட்களாக ஓம் சிவ சிவ ஓம் செய்ய இயலாமல் போனவர்களும் இந்த புனிதமான நாளன்று துவங்கலாம். கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டில் சிவளிங்கதிற்கோ அல்லது சிவபெருமானின் புகைபடதிற்கோ வில்வ இல்லை அர்ச்சனை செய்து மிளகு, ஜீரக சாதம் படையல் இட்டு பக்தியுடன் வேண்டிக் கொள்ளவும். தொடர்ந்து வில்வ இலையினை கொண்டு பூஜை செய்தால் அமது பாவம் நீங்குவதோடு மட்டும் அல்லாமல் நமது முன்னோர்களின் ஏழேழு ஜென்ம பாவங்களும் நீங்கி விடும். ஒரு முறை சிவராத்திரி தினத்தன்று வேட்டையாட ஒரு வேடன் சென்றான் வேட்டையில் அன்றைய பொழுது அவனுக்கு எதுவும் கிடைக்கவில்லை, போதாதென்று ஒரு புலி வேடனை துரத்தி கொண்டு வந்தது. செய்வதறியாது திகைத்த வேடன் ஒரு மரத்தின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு புலி செல்லும் வரை காத்து கொண்டு இருந்தான். ஆனால் புலி செல்லவில்லை. இரவு நேரம் என்பதால் தூக்கம் வரக் கூடாது என்று சொல்லி அந்த மரத்தின் இலைகளை ஒவ்வொன்றாக பறித்து கீழே போட்டுக் கொண்டு இருந்தான் வேடன். அவன் ஏறியது வில்வ மரம் அவன் கீழே போட்ட இலைகள் அனைத்தும் மரத்தடியில் வைக்கப்பட்டிருந்த லிங்கத்தின் மீது விழுந்தது. எனவே அவ்வேடன் சிவராத்திரியன்று பூஜை செய்ததன் பலனை பெற்றான். சிவபெருமான் அவனுக்கு காட்சி அளித்து ஆட்கொண்டார். இன்றும் அந்த கோவிலில் சிவராத்திரி தினத்தன்று கோவில் கோபுரத்தின் கீழ் வேடன் உருவத்தை நிறுத்து சிவனுக்கு பூஜை செய்து விட்டு வேடனுக்கும் செய்கின்றனர். இந்த அற்புத சம்பவம் நிகழ்த்த இடம் திருவைகாவூர். தஞ்சாவூர் பாபநாசத்தில் இருந்து பனிரெண்டு கிலோ மீட்டர் தொலைவிலும் சுவாமிமலையில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. நன்றிகள் விகடன், குருநாதர்.
No comments:
Post a Comment