Monday, 20 May 2013

ஓஷோ: இந்த உலகத்தின் கடைசி மதத்தை உருவாக்கிய இந்து





ஓஷோ சாகரத்தின் சங்கமமாக கருதப்படுகிறார்.இவர் கி.பி.1911 ஆம் ஆண்டில் இந்தியாவில் புனே அருகில் உள்ள குச்வாடா என்ற கிராமத்தில் பிறந்தவர்.இவரது ஆளுமையைச் செதுக்கியவர் இவரது பாட்டி!!!
இதனால்,21 வயதிலேயே தத்துவத்தில் எம்.ஏ.முடித்தவர்.இவரது சிந்தனைக்கு ஏற்ற இடமாக அமெரிக்கா இருந்தது.இவரது போதனைகள் மிக யதார்த்தமானதாக இருக்கின்றன.இதனால்,அமெரிக்க அரசாங்கமேஇவரைப்பார்த்துப் பயந்துபோனது.இவர் 64,000 ஏக்கரில் ரஜனீஷ்புரம் என்ற நகரத்தையே உருவாக்கினார். (அமெரிக்காவில்தான்). உலகிலேயே அதிகமான மெர்ஸிடஸ் பென்ஸ்கார்கள் வைத்திருந்தவர் என்ற கின்னஸ் சாதனையை இவர் படைத்தவர்.அத்தனையும் இவர் மீதான பாசத்தால் இவரது அமெரிக்க சீடர்கள் அன்பளிப்பாக கொடுத்தவை.
இந்தியாவை விட்டுச்செல்லும்போது இவர் தனதுதாய்நாட்டின் பெருமையை உணரவில்லை.உலகம் முழுக்கச் சுற்றிய பின்னர்தான் ,தனது தாய்நாடான இந்தியாவின் அருமை பெருமை புரிந்தது.அதன்விளைவாக,இவர் எழுதிய புத்தகமே ‘நான் நேசிக்கும் இந்தியா’.சுமார் 500 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம் இந்தியாவின் ஆன்மாவை நம் ஒவ்வொருவருக்கும் காட்டுகின்றது.
இவர் சொல்வது என்னவெனில்,மதத்தலைவர்களும்,அரசியல்வாதிகளும் கூட்டுசேர்ந்து, ‘காமம் ஒரு கொடூரமான பாவம்’ என இந்த பூமியையே நம்ப வைத்துவிட்டனர்.அதனால்தான் நாம் அனைவரும் மனநோயாளிகளாக வாழ்ந்து சாகிறோம்.ஆனால்,காமம் தான் நம்மை இயக்கும் சக்தி என விளக்குகிறார்.
எனது அனுபவப்படி,ஓஷோவைப் புரிந்துகொள்ளவேண்டும் எனில் முதலில் “ஓஷோ:வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்”என்றபுத்தகத்தை முதலில் வாசிக்க வேண்டும்.அடுத்ததாக, “காமத்திலிருந்து கடவுளுக்கு” என்ற புத்தகத்தை சுமார் 50 முறையாவது ஒவ்வொரு மனிதனும் வாசிக்க வேண்டும்.சிந்தனைத் தெளிவு கிடைக்கும்.
இவரது புத்தகங்களில் ஒன்று “மறைந்திருக்கும் உண்மைகள்”= இந்தப்புத்தகத்தை நான் முதன்முதலில் வாசித்தபோது அன்று இரவு முழுக்க தூங்கவேயில்லை.இவ்வளவு சீரும் சிறப்பும் மிக்க எனது இந்துதர்மத்தைப் பற்றி ஏன் பலருக்குத்தெரியவில்லை? தெரிந்தால் தன்னம்பிக்கையின்றி வளரும் இந்திய இளைஞர்கள் தங்களது முழுசக்தியையும் உணர்ந்துகொள்வார்களே!

(ஆக,அரசியல் அக்கப்போர்கள் இந்துதர்மத்தின் பெருமைகளை நமது நாட்டுமக்கள் தெரிந்துகொள்ளாமல் தடுப்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றன.மக்கள் முட்டாள்களாக இருக்க,இருக்க அவர்களின் அரசியல் வியாபாரம் செழிப்பாக ஓடும் என்பதில்தான் கவனமாக இருக்கின்றனர்.
அதன்பிறகு,நான் இந்த புத்தகத்தை இதுவரை 100 தடவைக்கும் மேல் வாசித்துவிட்டேன்.)
இந்துதர்மக் கோட்பாட்டின்படி, 84 லட்சம் வகையான உயிரினங்கள் இருக்கின்றன.நவீன,உயிரியலும் இதை உண்மைதான் என்பதைக் கண்டறிந்துள்ளது.இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால்,மனிதன் ஒவ்வொருவரும் இந்த 84 லட்சம் உயிரினங்களாகப் பிறந்தப்பின்னர்தான், மனிதப் படைப்பில் வரமுடியும் என இந்துதர்ம சாஸ்திரங்கள் விளக்குகின்றன.

பல லட்சம் பிறவிகள் கடந்து மனிதப்பிறவியடைந்தும் கூட ஏன் வெட்டிவேலை பார்க்கவேண்டும்?ஏன் இவ்வரிய வாழ்க்கையை வீணடிக்கவேண்டும்? ஆகவே,ஆத்ம பரிசோதனையில் ஈடுபடுங்கள்.

ஒரு யானை தான் இறக்கும் தருவாயில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வாய்ப்பிருந்தும்,ஒரு முயலுக்கு புகலிடம் கொடுத்தமையால்,விழிப்புணர்வு ஏற்பட்டுஅதன் அடுத்த பிறவியில் மனிதனாய் பிறக்க நேர்ந்தது. அவர் தாம் புத்தர்!
ஜோதிடர்களின் அறிவுரைப்படி உலக சுகங்கள் அனைத்தும் கிடைக்கும்படியும்,கவலைகள் அறியாவண்ணம் இருக்குமாறு தன் மகன் சித்தார்த்தனை
வளர்த்தார் அரசர்.
சுகபோகங்களில் மூழ்கித் திளைத்திருந்த சித்தார்த்தன்,ஒரு நாள் நடு இரவில் கண்விழித்துப்பார்க்கையில்,அந்தப்புரத்து மங்கையர் பலர் அலங்கோலமாய் படுத்திருக்க,குறட்டைவிட்டுக்கொண்டும்,வாயிலிருந்து எச்சில் வழிந்தும் மற்றும் பிற அங்கங்கள் நாறிட காட்சிதர இக்கொடும் காட்சியை முதல் முறையாகக் கண்ட சித்தார்த்தன், மனம் வெதும்பி இம்மாயையை விட்டு விலகி,ஞானத் தேடலுக்கு ஆயத்தமானார்.ஆதாரம்:புத்தரின் உபதேசங்களை 12 தொகுப்புகள் “தம்மபதம்”என்றதலைப்பில் விளக்க உரைதந்துள்ளார் ஓஷோ!

சரகர் ஒரு அந்தணர்,நாடு புகழும் பெரும்பண்டிதர்.அரசவையில் முக்கிய ஆலோசகர்.இவர் ஞான வேட்கை கொண்டு புத்தரின் நேரடிச் சீடரான ஸ்ரீகீர்த்தியின் சீடரானார்.கனவில் ஒரு பெண் உருவம் தோன்றியது.அப்பெண்ணே தனது உண்மை குரு என்றுணர்ந்து,அவரைத் தேடிச்சென்றார்.ஒரு தாழ்குலப்பெண் அம்பு செய்யும் தொழிலில் ஈடுபட்டு இருப்பதைக் காண,அவரே தன் ஆதர்ச குரு என்பதை உணர்ந்துகொண்டார்.அவரை சரகர் சரணடைந்தார்.குரு,சீடர் இருவரும் இடுகாட்டில் வாழ்ந்தனர்.
சுடுகாட்டில் ஆட்டம்,பாட்டம்,நிர்வாணத் தியானம் என்று ஒரு விசித்திர பாடசாலை அரங்கேறியது.அங்கு செல்வோரெல்லாம் இவரைப்பின்பற்றுவதும் ஆயிற்று.நாட்டுமக்கள் இவரை இழிசொல்லால்தூற்றினர்.இவற்றையெல்லாம் கேள்விப்பட்ட அரசனும்தன் அபிமானத்துக்குரிய ஆலோசகர் இவ்வாறுமாறிப்போய்விட்டானே என்ற ஆதங்கத்தில், சரகரை அழைத்து வரசில பெரியோர்களை தூது அனுப்பிவைத்தார்.
சரகர் அவர்களுக்காக 120 பாடல்களைபாடினார்.சென்றவர்கள் திரும்பவில்லை.இதையடுத்து சரகரின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்த ராணி சரகரைக் காணச் சென்றாள்.ராணிக்காக 80 பாக்களைப் பாடினார் சரகர். ராணியும் நாட்டையும் அரண்மனையையும் துறந்தாள்.கலவரப்பட்ட அரசர் தானே நேரில் சென்று சரகரைச் சந்தித்தார்.அரசனுக்காக சரகர் மேலும் 40 பாக்களை(பாடல்களை)ப் பாடினார்.அரசர் சரகரை சரணடைந்தார்.அரசனே மாறிப்போனதால்,அந்த ராஜ்ஜியமே மெல்ல,மெல்ல சரகரின்பக்கம் திரும்பியது.அவர் இயற்றியப்பாக்களைத் தான் “சரகரின் ராஜகீதம்” என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு தந்திரயோகம் தந்து அருளினார் சரகர்.
அதேசமயம்,உலகின் முதல் யோகி எனப்படும் பரமசிவன், பார்வதிதேவிக்கு அருளியது தந்திரசாஸ்திரம் எனலாம்.
இதுநாள் வரை நடைமுறையில் இருந்து ,இருக்கின்ற,இனிமேலும் வரக்கூடிய அனைத்து தியான முறைகளையும் உள்ளடக்கிய 112 வகையான தியான செயல்முறைகளின் மூலம் தந்திரயோகத்தை பார்வதிதேவிக்கு உபதேசிக்கிறார் பரமசிவன்.

சுவாமி ராமதீர்த்தர், ரமணமகரிஷி, புத்தர்,ஜெ.கிருஷ்ணமூர்த்தி, குர்ஜிப் ஆகியோர் இதில் எந்த வகையான தியானம் பயின்று முக்தி அடைந்தார்கள் என்ற சுவராஸ்யமான குறிப்புகளை ஓஷோ தருகிறார்.
இவ்வழிமுறைகள் அனைத்தும் “விஞ்ஞான பைரவ தந்திர” என்ற ஆதி நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.எவரும் அறியாமல் ரகசியமாக நெடுங்காலமாக பாதுகாக்கப்பட்ட இந்நூலுக்குஒஷோ1200 பக்கங்கள் கொண்ட விளக்க உரை எழுதியிருக்கிறார். “The book of Secrets”விலை மதிக்க முடியாத பொக்கிஷம்.இப்புத்தகத்தை வாங்கித் தெளிவு பெறுக.
இவரை மேலும் வளரவிட்டால் தங்கள் அமெரிக்கநாட்டுக்குள் (குறிப்பாக கிறிஸ்தவர்களின்)மனோபாவத்தையே மாற்றி மேற்கத்தியர்களின் போக்கையே திசை திருப்பிவிடுவார் என்று அஞ்சி அமெரிக்க அரசாங்கம் (அதிபர் ரொனால்டு ரீகன் காலத்தில்) ஓஷோவை காரணமின்றி சிறையில் அடைத்தது.அவருக்கு ஊசி மூலமாக மெல்லக்கொல்லும் விஷத்தை உடலில் ஏற்றியது.பின்னர்,குற்றங்கள்நிரூபிக்க முடியாததால் டெக்னிக்கல் காரணம் காட்டி அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
எந்த ஐரோப்பியநாட்டுக்குள்ளும் நுழையாதபடி அமெரிக்க எதேச்சதிகாரம் சதி செய்தது.இங்கிலாந்தில் transit flightக்காக காத்திருந்த வேளையில் கூட 6 மணிநேரம் லண்டன் ஜெயிலில் பிடித்து வைத்திருந்தார்கள்.
எதிலும் துணிவு,சமன்பாட்டு நோக்கமும் நெஞ்சுரமும் கொண்ட ஓஷோகிறிஸ்தவ உலகத்திற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார்.
எந்த ஒரு சாமனியனும் முக்தி அடையலாம் என்பதற்கு உதாரணமாக ஓஷோ உலகிற்கு ஒரு விடிவெள்ளி.
ஆன்ம,தத்துவவிஷயங்களில் அவர் தொடாத சப்ஜெட்டே கிடையாது.
600 க்கும் மேற்பட்டபுத்தகங்கள் இவர் எழுதியுள்ளார்.இப்படி எந்த துறவியும் இதுவரை எழுதியதில்லை;1800 தலைப்புகளில் இவரைப்போல் இனி ஒருவர் பேசுபவர்பிறப்பாரா?என்பதும் சந்தேகமே!!!இதுவரை இவர் பயன்படுத்தியுள்ள வார்த்தைகளின் மொத்தம் 6 கோடி.

இவர் கி.பி.1986 வாக்கில்தான் இந்த பூமியை விட்டுச் சென்றார்.இவரது போதனைகளைக் கண்டு,இவர் ஒரு செக்ஸ் சாமியார் என்றே உலகம் நம்புகிறது.

Wednesday, 15 May 2013

கடவுளின் துகள் கண்டறிந்த நாத்திகர்



இந்த உலகம் பிறந்தது எனக்காக என மகிழும் நம்மில் சிலருக்குத் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கும் ஒரு கேள்வி- இந்த உலகம் எப்படிப் பிறந்தது? யார் படைத்தது?

‘அவர்தான் கடவுள்’ என உலகின் பல மதங்கள் சொல்லுகின்றன. ஆனால் 1370 கோடி ஆண்டுகளுக்கு முன் பிரம்மாண்ட அணுக்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்த ‘பிங் பேங்க்’ வெடிப்பு நடந்த அந்த வினாடியில் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் அதிவேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறிய அணுக்கள்தான் நாம் இருக்கும் பூமி, நட்சத்திரங்கள், கோள்கள், வெளிமண்டலம் எல்லாம் நிலைகொண்டன என்கிறது விஞ்ஞானம். பிரபஞ்சம் இப்படி உருவானதாக உலகளவில் விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தியரி இது. இதன்படி பிரபஞ்சம் சூரியன், சந்திரன், கடல், காற்று, நீங்கள், நான், நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் இந்தக் கல்கி உள்பட எல்லாமே மூலத் துகள்களால் (Elementary Particles) ஆனது.
‘பிரபஞ்சம் உருவாக அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத்துகள்கள். இதில் 11 அணுத்துகள்களை ஒரு முக்கியமான அணு இணைக்கிறது. அந்த ஒரு அணுத்துகளுடன் தொடர்பு கொண்ட பின்னரே மற்ற அணுக்களுக்கு மாஸ் (எடை அல்ல நிறை) கிடைக்கிறது. அதனால்தான் பேரண்டம் உருவாகியிருக்கிறது’ என்கிறது விஞ்ஞானம். விஞ்ஞானிகளுக்குப் புரியாத புதிராக இருந்த அந்த ஒரு அணுத்துகளுக்கு ஹிக்ஸ் போஸான் என பெயரிட்டிருந்தார்கள். பெயருக்குக் காரணம் இதை உலகுக்குச் சொன்ன விஞ்ஞானியின் பெயர் பீட்டர் ஹிக்ஸ். அவர் கையாண்ட கணக்கீட்டு முறையைக் கண்டுபிடித்தவர் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ். இவர் 1920களில் ஆல்பர்ட் ஐன்ஸ்டினுடன் பணியாற்றியவர். அணுத்துகள் ஆராய்ச்சியில் உலக புகழ் பெற்றவர். அவரது பெயரால் அணுச்சிதறல்கள் போஸான்கள் அழைக்கப்படுகின்றன.
(இந்த மாபெரும் மேதை இந்தியாவில் கவனிக்கப்படாமலும் உலகம் மறந்து போனதற்கான காரணமும் அதிலிருக்கும் அரசியலும் தனிக்கதை.)

அப்படியானால் அந்த அணுத்துகள் தான் கடவுளா? என்ற விவாதம் வலுத்துக்கொண்டிருந்ததினால் அது ‘கடவுள் அணுத்துகள்’ என்றே பாப்புலராக அறியப்பட்டது. ஆனால் கடவுளுக்கும் இந்த அணுத்துகளுக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை. ஹிக்ஸ் போஸான் பற்றி இயான் லெடெர்மென் என்ற நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி 1993ல் ஒரு புத்தகம் எழுதினார். சனியன் பிடித்த அணு; இதுதான் பிரபஞ்சத்தின் விடை என்றால் கேள்வி என்ன? (The Goddamn Particle: If the Universe Is the Answer, What Is the Question?') என்று ஒரு புத்தகம் எழுதினார். பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் அதை God Particle என்று மாற்றிவிட்டதால் உலகம் அதை அப்படியே அழைத்தது.
இந்தப் பேரண்டம் உருவாகக் காரணமான மற்ற அணுக்கூறுகளின் எடை அளவை கணக்கில் கொண்டு மீதியிருக்கும் ஒரு மிகச்சிறிய பகுதியான (இம்மியளவு) மூல அணுக்கூறான துகள் ஹிக்ஸ் போஸானின் எடை 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் என்பதைக் கணக்கிட்டுவிட்டார்கள். அந்த எடையைப் பரிசோதனைகள் மூலம் நிருபித்துவிட்டால் நமக்காகப் பிறந்த இந்த உலகம் எப்படி; எவற்றினால் உருவாயிற்று என அறியமுடியும் என்று அதைத் தேடி அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஆராய்ச்சியில் இறங்கின. ஆனால், பல ஆயிரம் கோடி செலவழித்த நிலையில் ஹிக்ஸ் போஸானைக் கண்டுபிடிக்க முடியாததால் ஆராய்ச்சியில் இருந்து அமெரிக்கா விலகியது.கண்ணாலும், மைக்ரோஸ்கோப்பிலும் பார்க்கவே முடியாத ஹிக்ஸ் போஸானை நிரூபிக்க ஒரே வழிதான் இருந்தது. அதன் சரியான எடையைக் கண்டுபிடிப்பது. அதற்கு அணுக்களை மோதவிட்டு ஒரு பிரளயத்தை ஏற்படுத்திப் பார்க்கவேண்டும், 20 நாடுகள் இணைந்து உருவாக்கிய ஐரோப்பியக் கூட்டமைப்பு சார்பில் பிரான்ஸ் சுவிட்சர்லாந்து எல்லையில் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில் 100 மீட்டர் ஆழத்தில் 27 கி.மீ. பரப்பில் வட்ட வடிவ ஆய்வகம் அமைத்து செர்ன் (CERN) 7 விதமான ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றாக 10 மில்லியன் டாலர் செலவில் 17 கி.மீ. நீள சுரங்கத்தில் விஞ்ஞானிகள் இரவு பகலாகச் செய்த ஆராய்ச்சியின் ஒரு கட்டம்தான் இந்தச் சிறிய செயற்கைப் பிரளயம்.40 ட்ரில்லியன் (40 லட்சம் கோடி) புரோட்டான்களின் அதிபயங்கர வேகத்தில் மோதச்செய்து வெடித்துச் சிதறிய அணுத் துணைத்துகள்கள், கதிர்வீச்சுகளுக்கு இடையே ஹிக்ஸ் போஸானையும் (அதன் எடையை) கண்டுபிடித்துவிட்டனர். ஹிக்ஸ் போஸானின் எடை ஆராய்ச்சிகளில் கணக்கிட்டிருந்ததுபோலவே மிகச் சரியாக 125.3 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் என்ற உண்மைதான் இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. பிரளயத்தினால் உலகம் அழியும் என்று நம்பும் உலகில் ஒரு செயற்கைப் பிரளயத்தை உருவாக்கிப் பிரபஞ்ச ரகசியத்தை அறியும் மனித முயற்சியின் வெற்றியாக இப்போது ‘கடவுளின் அணுத்துகள்’ கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது.

இது ஏதோ ஒரே நாளில் நிகழ்ந்த அற்புதம் போல், ‘கிட்டத்தட்ட கடவுள்’ ‘கடவுளைக் கண்டுபிடித்துவிட்டார்கள்’ (எப்போது காணாமல் போனார்?) என்றெல்லாம் மீடியாக்கள் சாகஸம் செய்கின்றன. உண்மையில் இது பல ஆண்டுகளாகச் செய்யப்பட்டு வந்த ஓர் ஆராய்ச்சியின் முடிவு. பின் ஏன் இவ்வளவு கலாட்டா என்கிறீர்களா? அணுத்துகள் ஆராய்ச்சியில் ஒரு துகளைப் பரிசோதனை ரீதியாக உருவாக்கி விட்டதாக அறிவிக்க ஐந்து சிக்மா துல்லியம் தேவை (ஐந்து சிக்மா என்பதன் பொருள் 99.999% சரியானது என்பது. அதாவது லட்சத்தில் ஒன்றே ஒன்று மட்டும் பிழையாகலாம்). அந்த நிலையில் நடைபெற்ற பரிசோதனை இப்போது வெற்றியில் முடிந்திருக்கிறது. 3000000க்கும் அதிகமான விஞ்ஞானிகளின் 25 வருட உழைப்பின் பலன்தான் இந்தக் கண்டுபிடிப்பு. இந்தியாவிலிருந்தும் டாடா இன்ஸ்டிட்யூட் அஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் (TIFR) உள்ளிட்ட ஆராய்ச்சிக் கூடங்களிலிருந்து பல விஞ்ஞானிகள் CERN ஆராய்ச்சியில் பங்கு கொண்டிருக்கிறார்கள்.
நடராஜர் சிலை வைக்கப்பட்டிருக்கும் இந்த மையத்தின் செய்தித் தொடர்பாளர் பாலோ ஜிபெலினோ இந்த ஆராய்ச்சித் திட்டத்தின் வரலாற்றுத் தந்தையாக இந்தியா விளங்கியது. இந்த சாதனையை அடைய இந்திய விஞ்ஞானிகளின் பங்கு மகத்தானது," என்று சொல்லியிருப்பதால் நாமும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். என் வாழ்நாளிலேயே நான் எழுதிய தியரி நிரூபிக்கப்பட்டிருப்பது நம்ப முடியாத ஆச்சர்யம்" எனச் சொல்லும் 83 வயது பீட்டர் ஹிக்ஸ்க்கு இந்த ஆண்டின் நோபல் பரிசு நிச்சயம். ‘கடவுளின் துகளை’ கண்டுபிடித்ததாக அறியப்படும் இவருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது!

இன்னும் கொஞ்சம் காலம் போனால் கிறித்துவர்கள் அது இயேசுவின் துகள் என்றும் இஸ்லாமியர்கள் அல்லாவின் துகள் என்றும் உரிமை கொண்டாடுவார்களோ ?

அணுவும் அவனே அகிலமும் அவனே



உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு!
பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார். தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார்.
அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த ‘காஸ்மாஸ்’ என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார். 13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும்.
இந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் துவக்க அவர் எண்ணினார். இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார். உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந்தும் அவருக்குத் திருப்தி ஏற்படவில்லை. பல்வேறு நாகரிகங்களையும் அவை சார்ந்த மதங்களையும் ஆராயப் புகுந்தவர் அவற்றின் இதிஹாஸ புராணங்களையும் படிக்க நேர்ந்தது. இறுதியாக அவர் பார்வை ஹிந்து நாகரிகத்தின் மீதும் ஹிந்து இதிஹாஸ புராணங்களின் மீதும் பதிந்தது. ஹிந்து மதத்தின் அறிவியல் ரீதியான பிரபஞ்சம் பற்றிய கொள்கையைப் படித்துப் பிரமித்து அவர் அசந்தே போனார்.
இந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத்தை வழங்கியவர்கள். ஒன்றுக்கு பக்கத்தில் பூஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால் ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. இந்த வியப்பிற்குரிய அமைப்பு கணிதத்தையே எளிமையாக்கி எவ்வளவு பெரிய எண்ணானாலும் எழுதுவதற்கும் கணக்குகளைப் போடுவதற்கும் சௌகரியத்தை ஏற்படுத்தியது. ரோமானிய எழுத்துக்களால் எழுதப்படும் எண்ணோ ஒரு பெரிய தொகையை எழுதும் போது மிக்க குழப்பத்தை விளைவிக்கிறது. சுலபமான நடைமுறையில் இல்லாத அதை எழுதவே சிரமப்பட வேண்டும்.
இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக் குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் திரும்பவும் பார்வை ஹிந்து மதம் பக்கமே திரும்ப வேண்டும்!
விஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற
அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள் பிஸிக்ஸ் போன்றவை
உருவாகி உள்ளன.
கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும் இரு கோவில்களுக்கு விஜயம் செய்தார். ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.
எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம் இதைச் சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.
பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான ‘தி எட்ஜ் ஃபார் எவரில்’ (The edge forever) அவர் பயன்படுத்திக் கொண்டார். கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார்.
இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்க வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார்! ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். “தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்’ (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்; இன்றும் படித்து இன்புறுகின்றனர்!
அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-”மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார்வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று; அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது! கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்! பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன பௌதிகம் அணுத்துகளை – தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக – அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது. கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது.”
அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில்
சற்று அறிய வேண்டும் என்றார் காப்ரா! அணுவில் உள்ள அசைவை – நடனத்தை – சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர் 29ம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்:
“நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும். மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. ஹிந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்.”
நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புதக் காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.
விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்டு அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற வரிகளாகும் (இருவர் மயலோ என்று தொடங்கும் திருப்புகழ்)
இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி ஐரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது. (ஜெனிவாவில் அமைந்திருக்கும் இந்த மையத்துக்கு இந்தியா வழங்கிய நடராஜரின் சிலையைப் படத்தில் பார்க்கலாம்)
செர்ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு பெருமையுடன் தெரிவித்தது.
ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா?!

ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள் வழிபாடு!!!

நீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரி!ஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;

கடந்த மூன்று ஆண்டுகளாக ஜோதிடமும் ஆன்மீகமும் கலந்த ஆராய்ச்சியை செய்து,கிடைத்த அற்புத முடிவு இது;இந்த ஆராய்ச்சியில் இருபது வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.ஆராய்ச்சிக்க்கு ஒத்துழைப்புக் கொடுத்து,தமது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டின் பலன்களை உணர்ந்து பகிர்ந்து கொண்டனர்.

பாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி! தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன? என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.

நீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:

தேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.

தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:

1,அண்ணாமலை கோவிலின் உள்பிரகாரத்தில்

2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)

3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்

5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)

6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)

8.சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை

11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்

12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)

13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)

14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6

15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455

16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ணதாதேவியின் இடுப்பில் கைவைத்தபடி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் இருக்கிறாராம்.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)

18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்

19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்

20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)

21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை

23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182) 

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர். 26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.

27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்) 

28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.
30.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை


இந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.


சித்திரை மாதத்து தேய்பிறை அஷ்டமி 2.5.13 வியாழக்கிழமை காலை பத்து மணி இருபத்தைந்து நிமிடத்தில் இருந்து துவங்கி, 3.5.13 வெள்ளிக்கிழமை காலை எட்டு மணி இருபத்தெட்டு நிமிடம் வரை அமைந்திருக்கிறது.வியாழக்கிழமை இராகு காலம் மதியம் ஒன்றரை மணியில் இருந்து மூன்று மணி வரை வருகிறது.எனவே,உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.


அடுத்த தேய்பிறை அஷ்டமி:வைகாசி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=31.5.13 வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணி பதினொரு நிமிடத்தில் இருந்து 1.6.13 சனிக்கிழமை மாலை மணி ஐந்து,நிமிடம் ஐம்பத்து நான்கு வரை அமைந்திருக்கிறது.(சனிக்கிழமை ராகு காலம் காலை ஒன்பது முதல் பத்து முப்பது வரை)சனிக்கிழமையில் வருவதால்,கன்னி,துலாம்,விருச்சிகம்,மீன ராசியினர் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.



ஓம் சிவசிவ ஓம்

வேலூர் மாவட்டத்தில் ஒரு சிவாலயதில் நடக்கும் அதிசய சம்பவம்

தமிழகத்தின், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த விண்ணம் பள்ளியில் வரலாற்று சிறப்பு மிக்க அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கி.பி.12-ம் நுற்றாண்டில் சோழர் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டது.
ஈசானிய பார்வையில் வாயிற்படி கட்டப்பட்ட இந்த கோவிலில் அகத்திய முனிவர் வழிபட்டுள்ளார். இங்கு தரிசனம் செய்பவர்களுக்கு திருமணம் நடக்கும். நோய்கள் நீங்கும் என்று நம்புகிறார்கள்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5-ம் திகதி முதல் 11-ம் திகதி வரை காலை 6 மணி முதல் 7 மணி வரை சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.
லிங்கத்தின் மீது விழும் சூரிய ஒளியானது முதலில் கோவிலின் முன்புள்ள நந்தி மண்டபத்தின் உள் நுழைந்து கோவிலில் உள்ள மூன்று பிரகாரங்களை கடந்து பின்னர் லிங்கத்தின் மீது விழுகிறது.
முதலில் லிங்கத்தின் மேல்புறத்தில் விழுந்த ஒளி பின்னர் படிப்படியாக லிங்கத்தின் மையப் பகுதியை அடைகிறது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் 15 நிமிடங்களில் நடந்து விடுகிறது.
இன்று காலை 6.30 மணிக்கு சூரிய ஒளி விழுந்து பின்னர் காலை 6.45 மணிக்கு மறைந்து விட்டது. இந்த அரிய நிகழ்ச்சியை பார்த்த திரளான பக்தர்கள் உணர்ச்சி பெருக்கில் நமச்சிவாய என கோஷமிட்டனர். இது அற்புதமான காட்சியாகும்.
இதைகாண தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகத்திலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர். பக்தர்கள் 7 நாள் இதை தரிசனம் செய்தால் 7 ஜென்ம தீவினைகள் அகன்று நன்மை பெறலாம் .

நியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட்டி


இந்து தர்மத்தின் புராதன போர்க்கலைகளில் ஒன்று வர்மக்கலை ஆகும்.இதன் மருத்துவசிகிச்சைப் பிரிவே இன்றைய நியூரோதெரபி ஆகும்.மும்பையில் டாக்டர் லஜ்பதிராய் மெஹ்ரா  என்பவரால் இன்றைய நவீன உலகத்திற்கு ஏற்ப முறைப்படுத்தப்பட்டு,தமிழ்நாட்டில் சுமார் ஆயிரம் நியூரோதெரபிஸ்டுகள் மருத்துவச் சேவையாற்றிவருகின்றனர்.

எந்த ஒரு மருந்தும் இல்லாமலேயே நமது பல்வேறு நோய்களைக் குணப்படுத்தும் அதிசயத்தை நேரில் உணரும்போது ஆச்சரியமும்,மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியும் அடைகிறோம்.நமது உணவுப்பழக்கத்தை டிவி விளம்பரங்கள் மூலமாக மேல்நாட்டினர் மாற்றிவிட்டதால்,இன்று நோயாளி சமுதாயமாக மாறிவருகிறோம்;இதை மேல்நாட்டினரின் கலாச்சாரத் தாக்குதல் என்று மட்டும் எண்ணாமல்,நமது இந்து தர்மத்தின் மீதான சர்வதேச கிறிஸ்தவ தாக்குதல் என்று எடுத்துக்கொண்டால் மட்டுமே இனி நம் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தையும் நமது சுய அக்கறையால் பாதுகாத்திட முடியும்.எப்படி நமது ஆரோக்கியத்தை பாதுகாப்பது என்பதை நமக்கு விவரிக்கிறார் டாக்டர் விஜய் ஆனந்த்,நியூரோதெரபிஸ்ட்,திருச்சி.

சுமார் 12 ஆண்டுகளாக நியூரோதெரபிஸ்ட் சிகிச்சையை அளித்து வருகிறார்.இவரது மருந்தில்லாத சிகிச்சையால் குணமடைந்தவர்கள் ஏராளம்;பலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இவரை சந்தித்து சிகிச்சை எடுத்தப்பின்னர்,அறுவை சிகிச்சை எடுக்கவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது;இவரிடம் சிகிச்சை எடுத்தப்பின்னர்,இவர் சொல்லும் மருத்துவ ஆலோசனையை விடாப்பிடியாக பின்பற்ற வேண்டும்.அப்படி பின்பற்றினால் மட்டுமே மீண்டும் அதே நோய் நம்மை தாக்காது;முன் அனுமதி பெற இவரது செல் எண்:9894487122(காலை 9 மணி முதல் இரவு எட்டு மணி வரை);இவரை சந்தித்து சிகிச்சை எடுத்தப் பின்னர் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை மின் அஞ்சலிலும் அனுப்பி விளக்கம் கேட்டுக் கொள்ளலாம்.இவரது மின் அஞ்சல்:neurovijay@gmail.com  மருத்துவக் கட்டணம் மிக மிகக் குறைவு:
பின் குறிப்பு:உங்களின் மருத்துவ ஆலோசனையை போனில் முழுமையாக கேட்க வேண்டாம்;முன் அனுமதி பெற்று,உங்களது மருத்துவ ஆவணங்களை எடுத்துச் சென்று நேரில் ஆலோசனை கேட்கவும்;அதுவே உங்களுக்குச் சிறந்தது.இவரது பேச்சினை நமது யூட்யூப் சேனலில் பார்க்கலாம்;இந்த இணைப்பில் பெண்களின் முக்கியத்துவம் பற்றி பேசியிருக்கிறார்.
ஓம்சிவசிவஓம்