Monday, 17 December 2012

1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தபிறகு. . .

எந்த ஒரு மந்திரமும் 1,00,000 தடவை ஜபித்தபிறகே, அந்த மந்திரத்துக்கு உயிர் வந்து, அது செயல்படத்துவங்கும். இதை பலர் அனுபவத்தில் உணர்ந்துள்ளனர். ஆனால், ஓம்சிவசிவஓம் மந்திரத்தை 10,000 தடவை ஜபித்ததுமே அது செயல்படத்துவங்கும்;அதே சமயம், 10,000 தடவை நாம் ஓம்சிவசிவஓம் ஜபித்தபின்னர்,தொடர்ந்து ஜபிக்க முடியாத அளவுக்கு நமக்கு சிற்சில சோதனைகள் வரும்; நம்மை நமது மனவலிமையை சோதிக்கவே செய்யும்.

ஏன் இந்த சோதனைகள்?


மிக எளிதாக நமது கர்மவினையை அழிக்கவும்,மிக விரைவாக நற்பலன்களை நமக்குத் தரவும் செய்யும் மந்திரம் ஓம்சிவசிவஓம் என்பது கடந்த ஓராண்டாக உணர்ந்த உண்மை!

சும்மாவா வந்தது சுதந்திரம்? என்பதைப் போல, நவக்கிரகங்களின் இயக்கத்தில் நமது தீமையை தடுக்க உதவும் சிவமந்திரமாக ஓம்சிவசிவஓம் இருப்பதால், நவக்கிரகங்கள் நம்மை  தொடர்ந்து ஜபிக்க விடாமல் சூட்சுமமாக தடுக்கவே செய்யும். இருப்பினும், விடாப்பிடியாக ஜபிப்பது நமது மன வலிமையைப் பொறுத்தது.


அதனால்,ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் செய்பவர்கள்,ஒரு லட்சம் தடவை ஜபிப்பதே சாதனைதான்; அப்படி ஜபித்த பின்னர்,அவர்கள் செய்ய வேண்டியது என்னவெனில், தினமும் வெறும் 30 நிமிடம் மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவரவேண்டும். இப்படி ஜபித்து வருவதன் மூலமாக,நமது நியாயமான ஆசைகள், லட்சியங்கள், இலக்குகள் நிறைவேறும். (இது அனுபவ ரீதியாக உணர்ந்த உண்மை)

1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தபின்னர்,இந்த மந்திர சக்தி நமது உடல் மற்றும் மனதோடு இருக்கும். கூடவே,அதற்குமேல் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வரும்போது அதன் சக்தியை அளவிடவே முடியாது.


இப்போது ஒரு சந்தேகம் வருமே?

கடலோரக் கோயில்களில் ஏதாவது ஒரு கோவிலில் பவுர்ணமியன்று ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதாக வைத்துக்கொள்வோம்;கடலோரமாக ஒரு மந்திரத்தை ஒரு தடவை பவுர்ணமி /அமாவாசை / கிரகணம் / தமிழ் மாதப்பிறப்பு / தமிழ் வருடப்பிறப்பு நாட்களில் ஜபித்தாலே 2,00,00,000 தடவை ஜபித்ததற்குச் சமம். அப்படிப் பார்த்தால், பவுர்ணமியன்றோ / அமாவாசை / கிரகணம்/வருடப்பிறப்பு / மாதப்பிறப்பன்று ஒரு மணி நேரம் ஜபித்தாலே நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் 1,00,000 தாண்டி விட்டதாகத் தானே அர்த்தம்?

இது மிகச் சிறந்த சந்தேகம் தான்.ஆனால், நாம் ஜபிக்கும்எண்ணிக்கை 1,00,000த் தொடவேண்டும். அப்போதுதான் மந்திரம் உருப்பெறும்.(உயிர் பெறும்)

ஓம்சிவசிவஓம்
நன்றிகள் : குருநாதர் 

Thursday, 13 December 2012

உலக அறிவியல்துறைகளின் முன்னோடி நமது பாரதம்


உலக அறிவியல்துறைகளின் முன்னோடி நமது பாரதம்



1.நமது பாரதத்தில் கி.பி.500 முதல் பூஜ்யத்தை சூன்யம் என்று அழைத்தனர்.குறி(ஸிம்பல்) மற்றும் 1-10 வரை உள்ள தசம ஸ்தான முறை,இடத்திற்கு ஏற்ற மதிப்பு அறியப்பட்டன.சீனா-ஜப்பானில் கி.பி.600 முதல் 700 க்குள் இந்த முறைகள் பரவின.
கி.பி.900 வாக்கில் அரேபியாவிற்கும்,கி.பி.1300-இல் ஐரோப்பாவிற்கும் இந்த எண்கணித அடிப்படை அறிவு பரவியது.இன்று இந்த வலைப்பூ எழுதுமளவிற்கு கணினி தொழில்நுட்பம் (0,1 என்பதே கணினியின் அடிப்படை மொழி) வளர்ந்துவிட்டது.

2.பூஜ்யம்,1 முதல் 9 வரையிலான எண்கள் ஆர்யபட்டர் காலத்திலிருந்து(கி.பி.425) நமது நாட்டில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.ஐரோப்பாவில் இந்த எண்கணித முறை கி.பி.1546(Cataneo)யும்,மற்றும் கி.பி.1613(Cataldi)யும் வழக்கத்திற்கு வந்தன.அதற்கு முன்பு ஐரோப்பாவினர் இதில் அடிப்படை அறிவு அற்றவர்களாக இருந்தனர்.
3.தக்ஷ்ச சீலத்தில் ஏழு வருடங்களுக்கு மருத்துவம் படித்த ஜீவகன் மருத்துவத்திற்குப் பயன்படாது என்று ஒரு செடி கூடக் கண்டுபிடிக்கப்படவில்லை;மருந்திற்குப் பயன்படாதது என்று ஒரு வேர் கூடக் கிடையாது என தனது அனுபவத்தைக் கூறியுள்ளார். ‘ந அஸ்தி மூலம் அனெளஷதம்’ எனக்குறிப்பிடுகிறார்.
4.இன்று பள்ளிகளில் பயன்படுத்தப்படும்’ வர்க மூலம், கன மூலம் கண்டுபிடிக்கும் முறைகள்’ கி.பி.425 ஆம் ஆண்டில் ஆரியபட்டர் கண்டுபிடித்தது ஆகும்.
5.பரத்வாஜ மகரிஷி அவர்கள் எழுதிய புத்தகம் ப்ருஹத் யந்த்ர ஸர்வஸ்யம்.இதன் 40 வது அத்யாயம்:ப்ருஹத் விமான சாஸ்திரம்.
தூய கேது மின்சார சக்தியை உடையது என்று அவர் குறிப்பிடுகிறார்.(வித்யுத் கர்பஸ்தேஷி தூயகேதுவ:)
இவர் எழுதியுள்ள இன்னொரு நூல் அம்ச போதிநி.
இதில் ஒளி, வெப்பம்,விமானம் பற்றி விவரித்துள்ளார்.
6.லலித விஸ்தார என்ற புத்த நூல் கி.மு.100 இல் எழுதப்பட்டது.அதில் உலகின் மிகப் பெரிய எண்ணாகிய தல்லஷண(10 பவர் 53)என்பதையும்,அதாவது 10க்குப்பின் 53 பூஜ்யங்கள்! உலகின் மிகச்சிறிய எண்ணாகிய ப்ரமாணுஜ (அணுத்துகள் 7 பவர் 10):=அங்குல பர்வ என்பதையும் குறிப்பிடுகிறது.
7.கி.பி.1987 வாக்கில் இன்றைய மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குருக்ஷேத்திரத்தில் ஜெர்மனியைச்சேர்ந்த பெண் விஞ்ஞானிகள் பலமாதங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
முடிவில் அங்குள்ள மண்ணில் அணுக்கதிர் வீச்சு கதிரியக்கம் இருப்பதுக் கண்டு பிடிக்கப்பட்டது.அந்த கதிர்வீச்சின் வயது சுமார் 5000 முதல் 5100 வருடங்கள் இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளனர்.இன்று 27.5.2009 தேதிப்படி கலியுகம் துவங்கி 5109 ஆண்டுகள் ஆகின்றன. ஜாதகப்பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டுள்ளனர்.
8.புராதன மருத்துவ ரிஷி சுஸ்ருதர் கூறியுள்ளார்: மனித உடலில் முக்கியமாக 300 எலும்புகளும், 700 நரம்புகளும் உள்ளன.மனிதத் தோல் 7 அடுக்குகள் கொண்டது.
9.இன்றைய கணிப்பொறியில் ஆரியபட்டரின் குட்டகம் என்ற முறை பயன்படுத்தப்பட்டுவருகிறது.இது இன்றைய ஆரக்கிளுக்குச் சமம்.

இந்துயாவில் மட்டும் ஏன் இவ்வளவு சித்தர்கள் மகான்கள் பிறந்துகொண்டே இருக்கிறார்கள்?


ஜெருசலம்,அரேபியாவில் ஏசு பிரான் பிறந்தார்.மெக்காவில் நபிகள் நாயகம் பிறந்தார்.அதோடு சரி! அதன் பிறகு உலகில் எந்தநாட்டிலும் ஒரு மகான் கூடப் பிறக்கவில்லை.அமெரிக்காவில் திடீரென நான் தான் ஏசு என யாராவது கிளம்பினால் உடனே அமெரிக்க அரசு அந்த ஆளைத் தீர்த்துக்கட்டிவிடுகிறது.ஆனால், அமெரிக்கா கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு.கி.பி.2000 வாக்கில் ஏசு பூமிக்கு நேரில் வருவார் என்பதை நம்பும் நாடு.

உலகம் நாகரீகத்தின் உச்சம் பல இடங்களில் பரவியிருந்தாலும் முழுமை பெற்ற நாகரீகத்தின் உருவம்,வேதத்தில் தென்படுகிறது எனக்கூரியுள்ளார் மாக்ஸ்முல்லர்.இந்த ஆள் ஜெர்மன்காரன்.நமது வேதம்,இந்துமதம் இவற்றைப்பற்றி ஏராளமாக ஆராய்ச்சி செய்திருந்தாலும் திராவிடம் ஆரியம் என்ற அண்டப்புளுகை உருவாக்கியவன் இவனே!

இவனைத்தவிர கீத்,ப்ளூம் பீல்ட்,மாக்டனல்,விந்தர்நிட்ஸ் போன்றவர்கள் நமது வேதத்தின் தொன்மைகளை ஆராய்ந்து ஏராளமாக எழுதியுள்ளனர்.இவர்களது படைப்புகள் அனைத்தும் இன்றும் இங்கிலாந்தில் உள்ள இந்தியா ஆபிஸ் என்ற நூலகத்தில் இருக்கின்றன.
இந்த பூமியில் பாலைவனத்தில் கரும்பை விளைவிக்க முடியுமா? ஏனெனில் அதற்கு நிறைய தண்ணீர் தேவை.ஆற்றோரம் பேரிட்சையை விளைவிக்க முடியுமா? ஏனெனில் அதற்கு அதீத வெப்பமும் மிகக்குறைந்த தண்ணீரும் போதும்.
அதே போல மகான்கள் இந்த பூமியில்பிறப்பதற்கு ஏற்ற இடம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள நமது நாடு மட்டுமே பொருத்தமான இடம்!!!

நமது தொன்மையான சிறப்பான மொழி சமஸ்க்ரிதமும் தமிழுமே



ஸம்ஸ்க்ருதம் ஏன் பயில வேண்டும்?

நமது புராதன இந்துயாவில் இரண்டே இரண்டு மொழிகள் இருந்தன.ஒன்று நமது தாய்மொழியாம் தமிழ்.இன்னொன்று சமஸ்க்ருதம்.இந்த இரு மொழிகளும் சிவபெருமானின் கையில் உள்ள உடுக்கை ஒலியிலிருந்து பிறந்தன.சமஸ்க்ருதத்தை பாணினி என்ற மகரிஷியும் தமிழை அகத்தியர் என்ற மகரிஷியும் நமது பாரத நாட்டில் பரப்பினர்.இந்த இரு மொழிகளும் அந்தந்த காட்டுவாசிகளின் உச்சரிப்போடு கலந்து 1700 மொழிகளாகப் பிரிந்துவிட்டன.இப்படி 2 மொழியானது 1700 மொழியாகப் பிரிவதற்கு சுமார் 25,000 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளன.
இராமாயணம் நிகழ்ந்து 17,50,000 ஆண்டுகள் ஆகியுள்ளன.முதல் யுகமான திரேதாயுகத்தின் முடிவில் இராமாயணச்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.அப்போ 2 மொழியானது 1700 மொழியாக வளர 17,50,000 ஆண்டுகள் ஆகியுள்ளன என நம்பலாம்.ஆனால் வெள்ளைக்காரனால் நம்ப முடியாது.

இராமாயணகாலத்தில் தான் குரங்கிலிருந்து மனிதன் நாகரீகமடையத்துவங்கிய காலம் என புதைபொருள் ஆய்வாளர்களும் மானுடவியல் அறிஞர்களும் மதிப்பிட்டுள்ளனர்.இராமாயணத்தில் அசோகவனத்திலிருந்த சீதையிடம் அனுமன் இனிய மொழியில் பேசினான் என கவிச்சக்கரவர்த்தி கம்பர் தனது ராமாயணகாவியத்தில் குறிப்பிட்டுள்ளார்.இங்கு இனிய மொழி என்பது நமது தமிழ்தான்.ஆக ஆஞ்சனேயருக்கும் கூட பல மொழிகள் தெரியும் என்பது இதன் மூலம் புலனாகிறது.
தமிழ் மொழியில் திருமந்திரம் என்ன சொல்லுகிறது?இன்றைய நவீன உலகின் சிக்கல்கள் அனைத்தையும் எப்படி தீர்ப்பது என்பதைக்கூறுகிறது.இது தமிழர்களாகிய நம்மில் எத்தனை பேருக்குத்தெரியும்?திருமந்திரமா அது என்ன என்றல்லவா கேட்கிறோம்?
தமிழ் மொழியில் எத்தனை வளமான இலக்கியங்கள், இலக்கணங்கள் உள்ளனவோ அதே அளவிற்கு சமஸ்கிருதத்திலும் உள்ளன.நமது பாரதத்தின் இரு கண்களாக இந்த இரு மொழிகளும் உள்ளன.
சமஸ்க்ருதம் பற்றி ஒரு விஞ்ஞான ஆய்வு முடிவு:ஒரு கணிப்பொறியை ஸ்பெஷலாக உருவாக்கினர்.அந்த கணிப்பொறியின் டெஸ்க்டாப்பின் முன்பாக ஒரு மனிதன் நின்று கொண்டு பெண் என்று கூற வேண்டும்.இந்த பெண் என்ற வார்த்தையை இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மொழியிலும் கூற வேண்டும்.(உலகில் 6000 மொழிகள் பேசப்படுகின்றன).எந்த மொழியில் பெண் என உச்சரித்ததும் பெண்ணின் உருவம் தெளிவாகத் தெரிகிறதோ அந்த மொழியே கணிப்பொறிக்கு ஏற்ற மொழி என முடிவு செய்தனர்.சமஸ்க்ருதத்தில் மகிளா என உச்சரித்ததும் கணிப்பொறியின் முகப்பில் டெஸ்க்டாப்பில் பெண்ணின் உருவம் தெளிவாகத் தெரிந்தது.
இன்று நமது இந்துயா(பாரதம்)வில் சமஸ்க்ருதத்தை இரண்டாவது மொழியாகப் பேசுபவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி.
ஆங்கிலேயன் சமஸ்க்ருதத்தை செத்த மொழி என்று கூறினான்.ஏனெனில் சமஸ்க்ருதம் உலகம் முழுக்கப்பரவினால் ஆங்கிலமும் இங்கிலாந்தும் அழிந்துவிடும் என பயந்தான்.ஆங்கில மொழியியல் வல்லுநர்கள் அப்படித்தான் மதிப்பிட்டனர்.எனவே சமஸ்கிருதத்தை இறந்த மொழி என வதந்தி பரப்பினர்.
(நமது பகுத்தறிவுப்பகலவன்களுக்கு வசதியாகப் போய்விட்டது.சமஸ்க்ருதம் அய்யர்களின் மொழி.எனவே அது செத்துப்போன மொழிதான் என தூற்றினர்.நமது அப்பாக்களும் அதை நம்பினர்.தமிழிலிருந்து சமஸ்க்ருதத்திற்கும்
சமஸ்க்ருதத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் துறை அழிந்தது.ஜோதிடம், பண்பாட்டுப்பரிமாற்றம் நின்று போனது.ஆனால் இந்த பகுத்தறிவுப்பகலவன்கள் தனது பெயரை மட்டும் சமஸ்க்ருதத்தில் வைத்துக்கொண்டனர்.தமிழுக்கும் துரோகம் செய்தனர்.கருணாநிதி,தயாநிதி,கலாநிதி இவையெல்லாம் சமஸ்க்ருதப்பெயர்களே!)

இன்று 15 வயது நிறைவடைந்த எவரும் இலவசமாக சமஸ்க்ருதம் பயிலலாம்.இதற்காக ஸமஸ்க்ருதபாரதி என்ற தன்னார்வ அமைப்பு உலகம் முழுவதும் ஸமஸ்க்ருதம் பேச எழுத சொல்லித்தருகிறது.ஏராளமான வெள்ளைக்காரர்கள் தினமும் அஞ்சல் வழியாக சம்ஸ்க்ருதம் பயின்றுவருகின்றனர்.
நீங்கள் பள்ளி, கல்லூரி, நிறுவனம் எது நடத்தினாலும் சரி.குறைந்தது 10 பேர்கள் சமஸ்க்ருதம் பயிலத் தயாராக இருந்தாலே போதும்.கீழ்க்கண்ட முகவரிகளைத் தொடர்பு கொண்டாலே இலவசமாக சமஸ்க்ருதம் 10 நாள் பேச்சுப்பயிற்சிக்கு ஆசான்கள் உங்கள் இடத்துக்கே வருவர்.வந்து பயிற்றுவிப்பார்கள். ஆசான் கட்டணம் கூட கிடையாது.
ஒரு நாளுக்கு ஒரு முறை இரண்டு மணி நேரம் வீதம் வெறும் 10 நாளில் சரளமாக சமஸ்க்ருதம் பயிலலாம்.
தமிழ்நாட்டில் சம்ஸ்க்ருதபாரதியின் அஞ்சல்வழிப்பயிற்சியின் மாநிலத்தலைமையகம் இராஜபாளையத்தில் உள்ளது.
முகவரி:சமஸ்க்ருத பாரதி, பி.ஏ.சி.ஆர்.பவனம்,ரயில்வே பீடர் ரோடு, இராஜபாளையம்-626117.தொலைபேசி எண்:91-04563-231027விருதுநகர் மாவட்டம்,தமிழ்நாடு.நேரடிப்பயிற்சி தருவதற்கான தமிழ்நாடு மாநில அலுவலகம்:ஸம்ஸ்க்ருத பாரதி, எண்:43, B-6 ராம சதுக்கம் 3 வது மாடி,வள்ளுவர்க் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-34.தொலைபேசி எண்கள்:044-28272632, 28272639, 0-91-94437-22009.மேலும் விபரமறிய
www.sanskrita-bharathi.org

சித்தர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமா?இதோ சுலப வழி



இது 90 நாட்கள் தொடர்பயிற்சி...
தேவையானவை:
குறைந்தது 10 சதுர அடி கொண்ட ஒரு தனிஅறை
ஒரு குத்துவிளக்கு அல்லது சிறிய தீபம் எரியும் கிண்ணம் அதாவது கிளிஞ்சட்டி
தாமரை நூல் திரி மற்றும் சுத்தமான பசு நெய்(பாக்கெட் நெய் வேண்டாம்).ஒரு காசி சொம்பு,சுத்தமான நீர்.(வீட்டில் நிறைகுடத்திலிருந்து தினமும் தண்ணீர் முதலில் எடுக்கவும்).தினமும் சில பழங்கள்.
அமாவாசையன்று ஆரம்பிக்கவும்.இரவு சரியாக 8 மணிக்கு மந்திர ஜபம் ஆரம்பிக்க வேண்டும்.இரவு 9 மணிக்கு முடித்துவிட வேண்டும்.
அகத்தியர் சித்தர்களின் தலைவர்.நந்தீசர்,திருமூலர்,கொங்கணர்,கோரக்கர்,புலிப்பாணி, காகபுஜீண்டர் என பல ஆயிரம் சித்தர்கள் உள்ளனர்.உங்களுக்கு யாரைப் பிடிக்கின்றதோ அந்த சித்தரை-அவர் உருவம் நமக்கு தெரியாதல்லவா? எனவே அவரது பெயரை நினைத்துக் கொண்டு கீழ்க்காணும் மந்திரத்தை ஒரு மணி நேரம் தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்.
ஒம் சிங் ரங் அங் சிங்
இது தான் சித்தர்களை நேரில் வரவைக்கும் மந்திரம்.ஞானக்கோவை என்ற புத்தகத்தில் இந்த மந்திரம் கூறப்பட்டுள்ளது.
ஜபம் செய்யும் முறை:
அமாவாசையன்று இரவு 8 மணிக்குள் 10 சதுர அடி உள்ள அறையில் ஒரு விரிப்பு அல்லது பலகையை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைக்கவும்.அதிலிருந்து 8 அடி தூரத்தில் நமது கண்களுக்கு நேராக வருமாறு நெய்தீபம் தாமரைநூலில் எரியவேண்டும்.அந்த தீபத்தின் முன்பக்கம் காசிச்சொம்பில் சுத்தமான நீர் நிரப்ப வேண்டும்.அந்த காசிச்சொம்பின் முன்பக்கமாக பழங்களை நிவேதனமாக வைக்க வேண்டும்.
இரவு 8 மணியானதும் அந்த தீபத்தைப் பார்த்தவாறு நாம் விரும்பும் சித்தர் பெயரை நினைத்துக்கொண்டு மேலேக் கூறிய மந்திரத்தை உதடு அசையாமல் ஒருமணிநேரம் வரை ஜபித்துவரவேண்டும்.இப்படி தினமும் ஒருமணிநேரம் வீதம் 90 நாட்கள் ஜபித்துவர நமது சித்தர் நேரில் வருவார்.அவரை குருவாக ஏற்றுக்கொண்டு நிம்மதியாக வாழவும்.
9 மணியானதும் காசிச்சொம்பில் உள்ள நீரைப்பருகவும்.படையல் செய்த கனிகளைச் சாப்பிடவும்.இரவில் பால்சாதம் சாப்பிடவும்.
இந்த 90 நாட்களில் அசைவம் கண்டிப்பாக தவிர்க்கவும்.உணவில் உப்பு,காரம்,புளி குறைத்துக்கொண்டால் நல்லது.
இந்த முறையால் பல ஆயிரம் மனிதர்கள் பூமியில் சித்தர்களை தரிசித்துள்ளனர்.இன்றும் தரிசித்து வருகின்றனர்.
ஜாதி,மதம்,மொழி கடந்து யாரும் சித்தர்களை தரிசிக்கலாம்.
18 வயதுக்கு மேற்பட்ட யாரும் முயற்சிக்கலாம்.
வாழ்க வளமுடன்! உயர்க சித்தர்கள் அருளால்!!!
குறிப்பு: இந்த முயற்சி,சித்தர் சந்திப்பை ரகசியமாக வைத்துக்கொள்வது அவசியம்.தம்பட்டம் அடிக்கக் கூடாது.
உலகில எந்தப்பகுதியில் இருந்தாலும் ,வாழ்ந்தாலும் அந்தந்தப்பகுதியில் இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கவேண்டும்.

மந்திரங்கள் எவ்வாறு செயல் புரிகின்றன ?





சாதாரண வசவுவார்த்தைகளுக்கே வலிமை உண்டு.

அதை விட வாழ்க வளமுடன்,வாழ்க வையகம்; ஓம் சாந்தி, ஓம் சக்தி, ஜெய்ஸ்ரீராம் .. போன்ற வார்த்தைகள் ஒரு விதத்தில் மந்திரங்களே! இதற்கு வசவுவார்த்தைகளை விட வலிமை அதிகம்.
இவற்றை விட தேவாரம்,திருவாசகம்,கந்த சஷ்டிகவசம் முதலான பக்திப் பாடல்களுக்கு வலிமை அதிகம்.

இவற்றிற்குச் சமமாக சமஸ்கிருதவார்த்தைகளுக்கு வலிமை உள்ளன.

சமஸ்கிருத வார்த்தைகளை விட சமஸ்கிருத மந்திரங்களுக்கு ஜபிக்கும் போது வலிமை அதிகம்.

சமஸ்கிருத மந்திரங்களை விடவும் சமஸ்கிருத காயத்ரி மந்திரங்களுக்கு வலிமை அதிகம்.ஒவ்வொரு கடவுளுக்கும் காயத்ரி மந்திரங்கள் உண்டு.உதாரணமாக கணபதி காயத்ரி மந்திரமானது விநாயகக் கடவுளின் ஒலி வடிவமாகும்.
கடவுள்களின் காயத்ரிமந்திரங்களை ஜபிக்கும் போது உரிய கடவுளின் காதில் நாம் நமது கோரிக்கைகளை வைக்கிறோம் என்று அர்த்தம்.
கடவுளரின் காயத்ரிமந்திரங்களை 4,00,000 முறை சொன்னால் உரிய கடவுள் இந்த கலியுகத்திலும் ஜபிப்பவருக்கு நேரில் காட்சியப்பார்.இது அனுபவ உண்மை.
சமஸ்கிருத காயத்ரிமந்திரங்களை விட காயத்ரி மந்திரமே அதிக வலிமை மிக்கது.இந்த உலகில் உள்ள அனைத்து மந்திரங்களுக்கு உயிர் தருவது காயத்ரி மந்திரமே!
இந்த காயத்ரி மந்திரத்தை பூமிக்கு-கொண்டுவந்தவர் பிராமணர் அல்ல.ஒரு ஷத்திரியர்.அவர் பிரம்மரிஷி பட்டம் பெற்ற விஸ்வாமித்ரர் அவர்கள்.
இந்த காயத்ரி மந்திரத்தைக் கொண்டு புதிய பிரபஞ்சத்தையே படைத்தவர்.பூமியிலிருந்து தெற்குப் பகுதியில் உள்ள புதிய நட்சத்திரங்கள் விஸ்வாமித்ர மகரிஷியால் படைக்கப்பட்டவை.நவீன வானியல் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் மற்ற பகுதியில் உள்ள நட்சத்திரங்களை விட தெற்குப் பகுதி நட்சத்திரங்கள் வயது குறைந்தவை என மதிப்பிட்டுள்ளனர்.
இவ்வளவு சிறப்பு மிக்க காயத்ரி மந்திரத்தைத் தான் பிராமணர்கள் சந்தியாவந்தனம் செய்ய ஜபித்து வருகிறார்கள்.
காயத்ரி தேவி சூரியமண்டலத்தின் மையப் பகுதியில் ஐந்து முகங்களுடன் அமர்ந்து ஜபித்துக் கொண்டு இருக்கிறாள்.அம்பாள் உபாசகர்கள் பின்வரும் காயத்ரியை
ஜபித்துவர வாழ்க்கையில் செய்த பாவங்கள் கரைந்துவிடும்.
ஓம் பூ: புவ; ஸ்வ; தத்ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹீ
த்யோயோன: ப்ரசோதயாத்
இதுவே அந்த காயத்ரி மந்திரம்.இந்த மந்திரத்தில் : என்பது ஹ என்ற ஒலியைத்தரும். உதாரணமாக பூ: என்பதை பூஹ் என்று ஜபிக்க வேண்டும்.

பூமிக்கு மேல் உள்ள வானில் குறிப்பிட்ட கிலோ மீட்டர்கள் உயரத்தில் இது போன்ற மந்த்ரங்கள் நிரம்பிய வான்பகுதி உள்ளது.யார் தவம் இருக்கிறார்களோ அவர்களுக்கு அங்கிருந்து மந்திரம் கிடைக்கும்.
ஒரு மந்திரத்தை ஒருமுறை மனதிற்குள்-வீட்டில் அமர்ந்து ஜபித்தால் 10 முறை சொன்னதற்கான பலன் கிடைக்கும்.
அதே மந்திரத்தை கருங்கல்லால் கட்டப்பட்ட பழமையான கோவிலில் அமர்ந்து ஒருமுறை ஜபித்தால் 1000முறை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.
மலைமீதுள்ள கோவில் மீது ஒருமுறை ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால் 1 கோடி தடவை ஜபித்தற்கான பலன் கிடைக்கும்.
கடலோரம் உள்ள கோவில் அல்லது கடலில் இடுப்பளவு நீரில் நின்றவாறு ஒரு முறை ஜபித்தால் 2 கோடி தடவை ஜபித்ததற்கான பலன் கிடைக்கும்.
இவை-இந்த எண்ணிக்கையானது சாதாரண நாட்களில் ஜபித்தால் தான்.பவுர்ணமி,அமாவாசை,தமிழ் வருடப்பிறப்பு,சூரிய-அல்லது-சந்திர கிரகண நேரங்களில் ஜபித்தால் மேலே சொன்ன எண்ணிக்கை பெருக்கல் 100 கோடி தடவை ஜபித்தமைக்கான பலன் உண்டு.

எப்போதும் மந்திரங்களை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே அமர்ந்து அல்லது நின்று ஜபிப்பது முக்கியம்.
தெற்கு நோக்கி ஜபிக்கக்கூடாது.
காயத்ரி மந்திரத்தை அம்பாள் சன்னதியில் அமர்ந்து ஜபித்தால் கிடைக்கும் பலன்கள் எல்லையற்றவை!!!
இவை அனைத்தும் அனுபத்திலும்,ஜோதிடப் பெரியோர்கள் கூறக்கேட்டும் தொகுக்கப்பட்டவை.

நமது முன்னோர்களின் கணித அறிவு


நமது முன்னோர்களின் கணித அறிவு

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும், இன்னும் ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம், இதைப்பற்றிய தகவல்களை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா..?!

1 - ஒன்று
3/4 -
 முக்கால்
1/2 -
 அரை கால்
1/4 -
 கால்
1/5 -
 நாலுமா
3/16 -
 மூன்று வீசம்
3/20 -
 மூன்றுமா
1/8 -
 அரைக்கால்
1/10 -
 இருமா
1/16 -
 மாகாணி(வீசம்)
1/20 -
 ஒருமா
3/64 -
 முக்கால்வீசம்
3/80 -
 முக்காணி
1/32 -
 அரைவீசம்
1/40 -
 அரைமா
1/64 -
 கால் வீசம்
1/80 -
 காணி
3/320 -
 அரைக்காணி முந்திரி
1/160 -
 அரைக்காணி
1/320 -
 முந்திரி
1/102400 -
 கீழ்முந்திரி
1/2150400 -
 இம்மி
1/23654400 -
 மும்மி
1/165580800 -
 அணு --> 6,0393476E-9 --> nano = 0.000000001
1/1490227200 -
 குணம்
1/7451136000 -
 பந்தம்
1/44706816000 -
 பாகம்
1/312947712000 -
 விந்தம்
1/5320111104000 -
 நாகவிந்தம்
1/74481555456000 -
 சிந்தை
1/489631109120000 -
 கதிர்முனை
1/9585244364800000 -
 குரல்வளைப்படி
1/575114661888000000 -
 வெள்ளம்
1/57511466188800000000 -
 நுண்மணல்
1/2323824530227200000000 -
 
தேர்த்துகள்.

இவ்வளவு நுண்ணியமான கணிதம் அந்தக் காலத்தில் பயன்பாட்டில் இருந்துள்ளது.இந்த எண்களை வைத்து எத்தனை துல்லியமான வேலைகள் நடந்திருக்கும் என்று எண்ணிப்பாருங்கள், கணினியையும், கணிதப்பொறியையும் (கால்குலேடரையும்) தொழில் நுட்ப வளர்ச்சி என்று இன்றைய தலை முறை கூறிக்கொண்டு இருக்கும் போது, அதை விட ஆயிரம்மடங்கு மேலாக அந்த காலத்திலேயே நாம் சாதித்து விட்டோம்..!

நன்றிகள் : குருநாதர்