Wednesday, 16 January 2013

Swamy Vivekananda's 150th Birthday - (12.1.1863) Part - 1







விவேகானந்தர் பாறை:தடைகள் தகர்ந்தன!!!

சுவாமி விவேகானந்தரின் 100 வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 1963 இல் சென்னை ஸ்ரீராமக்ருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமிகள் கன்னியாக்குமரியில் அமைந்திருக்கும் ஸ்ரீபாதப் பாறையில் சுவாமிஜியின் திருவுருவச் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தார்கள்.
ஆனால்,கன்னியாக்குமரியில் இருக்கும் கத்தோலிக்க பாதிரிகள்  இதை தீவிரமாக எதிர்த்தார்கள்;இதற்கு எதிராக கிறிஸ்தவ மீனவர்களை தூண்டிவிட்டார்கள்;அந்தப் பாறையை அவர்கள் செயிண்ட் சேவியர் பாறை என்று அழைத்தார்கள்.அது மட்டுமல்லாமல் அந்தப்பாறையில் ஒரு சிலுவையை நட்டார்கள்;ஆனால்,கன்னியாக்குமரி இந்து மீனவர்கள் ஒருநாள் அந்தச் சிலுவையை அகற்றிவிட்டார்கள்;இதனால்,கிறிஸ்தவ மீனவர்களுக்கும்,இந்துக்களுக்கும் தகராறு உருவானது;



 இது விஷயமாக அன்றைய ஆர்.எஸ்.எஸ்.தலைவராக இருந்த திரு.குருஜிகோல்வல்கர் அவர்களின் வழிகாட்டுதல் படி அகில பாரத அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டது;அதன் செயலாளராக ஆர்.எஸ்.எஸ்.ஸின் பொதுச்செயலாளராக இருந்த ஏக்நாத் ரானடே பொறுப்பேற்றார்.


அப்போது இந்தியாவின் கலாச்சார உறவு அமைச்சராக ஹீமாயூன் கபீர் இருந்தார்;தமிழக முதல்வராக பக்தவச்சலம் இருந்தார்; இந்து கிறிஸ்தவ மோதலால் இந்த இருவருமே கன்னியாக்குமரியில் இருக்கும் ஸ்ரீபாத பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.என்ன கொடுமை? இந்து நாட்டில்  ஒரு மாபெரும் இந்துத் துறவிக்கு நினைவு இடம் அமைக்க எதிர்ப்பு! அந்த சமயத்தில்,காஞ்சி சங்கராச்சாரியார் இந்த நினைவு இல்லம் அமைக்க முழுஆதரவு தெரிவித்தார்;அவரது ஆதரவு விஷயம் தெரிந்ததும்,பக்தவச்சலம் தனது எதிர்ப்பைக் கைவிட்டார்;உடனே,கன்னியாகுமரிக்குச் சென்று அந்த ஸ்ரீபாதபாறை விவேகானந்தர் பாறைதான் என்பதை உறுதிபட தெரிவித்தார்.
ஏக்நாத் ரானடே,தனது அர்ப்பணிப்பு மனப்பான்மையால் ஹீமாயூன் கபீரின் மனத்தையும் மாற்ற வைத்தார்.


தி.மு.க.தலைவர் சி.என்.அண்ணாத்துரையை சந்தித்து அவரையும் விவேகானந்தர் நினைவுச் சின்னக் கமிட்டியின் உறுப்பினராக்கினார்;நினைவுச் சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்து கையொப்பமிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் திமுக,காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் இருந்தனர்.



ஏக்நாத் ரானடே கன்னியாக்குமரியில் இன்று நாம் காணும் விவேகானந்தர் பாறையில் கோவிலை உருவாக்கிட தனி ஒரு மனிதனாக எப்படியெல்லாம் படாதபாடு பட்டார் என்பதை விவேகானந்த கேந்திரம் புத்தகமாக வெளியிட்டிருக்கிறது.அதை படித்துவிட்டு,ஒருமுறை கன்னியாக்குமரி விவேகானந்தர் பாறைக்குச் சென்றால்,பிரமித்துப்போவீர்கள்.


ஏக்நாத் ரானடே பட்ட கஷ்டத்துக்கு முன்னால்,நாம் நமது சொந்த வாழ்க்கையில் படும் சிரமங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை என்றுதான் தோன்றும்.நம்மில் பலருக்கு அந்த புத்தகத்தை முழுமையாக வாசிக்கக் கூட முடியாது.அவ்வளவு கடினமான போராட்டங்களை சந்தித்திருக்கிறார்.பொதுச் சேவை,ஆன்மீகத்தொண்டு செய்ய விரும்புவோர் கண்டிப்பாக இந்த புத்தகத்தை ஒருமுறையாவது வாசிக்கவேண்டும்;நமது இந்து தர்மத்திற்கு எப்படியெல்லாம் ஆபத்து வந்திருக்கிறது என்பதை அறிய விரும்புவோரும் இதை நிச்சயம் வாசிக்க வேண்டும்.


அந்த புத்தகத்தின்பெயர்: விவேகானந்தர் பாறை:நினைவுச் சின்னத்தின் வரலாறு.


ஓம்சிவசிவஓம்

நன்றி:விஜயபாரதம்,பக்கம் 53,11.1.2013

குறிப்பு : இந்த பதிவினை விவேகானந்தர் பிறந்த தினத்தன்று வெளியிட இயலாமைக்காக ஆன்மீக எக்ஸ்பிரஸ் மிகவும் வருத்தப்படுகிறது.
மேலும் ஆன்மீக அன்பர்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது.
நன்றிகள் : குருநாதர் 

No comments:

Post a Comment