தேசியமும் தெய்வீகமும் நமது இரு கன்களாக இருக்க வேண்டும்.
தேச பக்தி இல்லாத தெய்வபக்தியால் தான் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நமது நாட்டின் நிலப்பரப்பை இழந்தோம்;இந்த கருத்தின் அடிப்படையில் சுமார் 100 பி.எச்.டி.ஆய்வுப்பட்டம் முடிக்க முடியும்.அந்த அளவுக்கு நமது பாரத நாட்டின் வரலாறு பரந்துவிரிந்து இருக்கிறது; அதே சமயம் பல நாட்டு உளவுத்துறைகளின் நயவஞ்சகத்தினால் நமது இந்து தர்மத்தின் பெருமைகளும்,மரபுகளும் சின்னாபின்னப்படுத்தப்பட்டு இருக்கிறது.
கி.பி.1000 வரையிலும் இந்துதர்மம் இன்றைய ஆசியக் கண்டம் முழுவதும் மற்றும் ஆஸ்திரேலியக்கண்டம் முழுவதும் பரவியிருந்தது;இன்றும் இந்தியாவைத் தவிர ஆசியா மற்றும் ஆஸ்திரேலியக் கண்டத்துநாடுகளில்
இதற்கான இந்துப்பண்பாட்டு மிச்ச சொச்சங்கள் இருக்கின்றன.இதில் பிரபலமான உதாரணமான கம்போடியாவில்
இருக்கும் அங்கோர்வாட் ஆலயத்தைச் சொல்லலாம்;ஒரேஒரு கேமிராவிற்குள் இந்த முழு ஆலயத்தின் முகப்பையும் இன்று கூட போட்டோ எடுக்க முடியவில்லையாம்;தவிர,தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலுக்குப்போயிருக்கிறீர்களா? அது பிரம்மாண்டமான சிவாலயம் ஆகும்.சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலுக்குப்
போயிருந்தீர்கள் எனில்,அதன் பிரம்மாண்டத்தைப் பார்த்தே அசந்து போய்விடுவீர்கள்.சிதம்பரம் நடராஜர் கோவிலின் வெளிப்பிரகாரத்தை
ஒரே ஒரு முறை நீங்கள் சுற்றி வருவதற்குள்ளாக உங்களது கால்கள் வலித்து,ஓரிருமுறையாவது நீங்கள் உட்கார்ந்து தான் சுற்றை முடிக்க முடியும்.
இலங்கைக்கும்
தெற்கே இரண்டாயிரம் சதுர கி.மீ.தூரத்துக்கு குமரிக்கண்டம்
இருந்திருக்கிறது.அங்கே இன்றைய சிதம்பரம் நடராஜர் திருக்கோவிலை விட பத்து மடங்கு அதாவது சுமாராக ஐந்து சதுர கிலோ மீட்டர்கள்
பரப்பளவுக்கு பிரம்ம்மாண்டமான சிவாலங்கள்
கட்டப்பட்டிருக்கின்றன என்று சில தொல்பொருள் ஆய்வாளர்கள்
கூறியிருக்கின்றனர்.அவை இன்றும் கடலுக்குள் மூழ்கியிருக்கின்றன.யாராவது வான் வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பணிபுரிந்தால்
உங்களது செயற்கைக்கோள்கள் மூலமாக போட்டோ எடுத்து அனுப்புங்கள்;அப்போது தெரியும்!!?
அதே அளவுக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீகால
பைரவரின் கோவில்களும் இருந்திருக்கின்றன;குமரிக்கண்டம் எனப்படும் லெமூரியாக் கண்டம் வடக்கே இன்றைய இலங்கை முதல் தெற்கே அண்டார்டிகா வரையிலும் கிழக்கே ஆஸ்திரேலியா முதல் மேற்கே தென் ஆப்ரிக்கா வரையிலும் பரவியிருந்திருக்கிறது.
தமிழ்நாட்டில்
திருவீழிசை என்னும் ஊரில் ஒரு பாறைவடிப்பு
இருக்கிறது.என்ன தெரியுமா? நாம் பயன்படுத்தும்
நோட்டுப்பக்கத்தின் தடிமன் எவ்வளவு இருக்கும்? இரண்டு மில்லி மீட்டர் இருக்குமா? அந்த அளவுக்கு பாறையை இளக்கி காகிதத் தடிமனுக்கு கொண்டுவந்திருக்கிறார்கள்.இன்று இருக்கும் எம்.டெக்.சிவில் என் ஜினியர்கள் யாராவது ஒரே ஒருவரால் இதே போல காகிதத் தடிமனுக்கு
ஒரு பாறையை செதுக்க முடியுமா?
இன்றைய கர்நாடக மாநிலத்தில் பேலூர் ஹளபேடு சிற்பங்கள் உலகப்புகழ் வாய்ந்தவை என்று பாடப்புத்தகத்தில் படித்திருக்கிறோம்;அவையெல்லாம் எப்படி உலகப்புகழ் வாய்ந்தவை என்பதை பாடத்திட்டத்தில்
சேர்க்கவே இல்லை;அங்கே ஆயிரம் கால் மண்டபம் ஒன்றுஇருக்கிறது.ஒவ்வொரு தூணின் அடிப்பகுதியும் தரையைத் தொடாமல் இரண்டு செண்டிமீட்டர்கள் மேலே நிற்கின்றன;அதே போல அந்தத் தூணின் மேல்பகுதியும்
மேலே இருக்கும் விதானம் அல்லது தளத்தினைத் தொடாமல் (கீழே இருப்பதுபோலவே) இரண்டு செண்டிமீட்டர்கள் இடைவெளிவிட்டு
நிற்கின்றன;இந்த இரண்டு செண்டி மீட்டர்கள் இடைவெளியில் ஒரு நோட்டின் காகிதத்தை அந்த தூணுக்கு அடியில் விட்டு எடுக்கலாம்;
நமது பாட்டானார்கள் அனைவருமே 400 வருட வல்லரசாகத் திகழும் அமெரிக்கனைவிடவும்,நமக்குச் சமமாக பொருளாதார வல்லரசாக இருக்கும் நம்ம பங்காளி சீனர்களை விடவும் மிகச் சிறந்த அறிவாளிகளே!அவர்கள் செய்திருக்கும்
சாதனைகளை நாம் பாதுகாத்து,நமது அடுத்த தலைமுறைக்குப்போதித்தாலே போதும்;அவர்களின் சாதனையை நாம் முறியடித்ததாக
அர்த்தம்.
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்ற வாழ்த்தொலிகள் இன்றும் தமிழ்ச்சிவாலயங்களில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன.அதெப்படி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது வரும் என்ற சந்தேகம் பல காலமாக எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது.பணம் சம்பாதிக்கும்
வேகத்தில் அவ்வப்போது இந்த நினைவுகள் நினைவுக்கு வரும்;அதோடு சரி! ஆனால் இன்று அதற்கான ஆதாரங்கள் கிடைத்துவிட்டன.ஆஹா! சிவபூமிதான் நாம் வாழும் பூமி என்று தெரிந்ததும் இந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியும்,பெருமையும் கொள்கிறேன்.ஆன்மீகக்கடல் பெருமைப் படுகிறது.
இந்த ஆதாரங்களை முழுமுதல் பரம்பொருள் மகிமை என்ற புத்தகம் நெடுகக் காணலாம்.தில்லி பல்கலைக்கழகத்தின்
ஆளுகைக்குட்பட்ட தயால்சிங் கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராக இருக்கும் முனைவர் சிவப்பிரியா என்பவர் இந்த ஆதாரங்களைத் தொகுத்துள்ளார்.இதற்காக நாம் ஜபிக்கும் ஓம்சிவசிவஓம்
மந்திரஜபத்தில் நூற்றில் ஒரு பங்கினை இவருக்கு நாம் வழங்குவதே மிகப் பொருத்தமாக இருக்கும்.
குவைப்பதி மலிந்த கோவே போற்றி! (திருவாசகம்)
குவைத் போன்ற அரபுநாடுகளில்
இருந்த எண்ணற்ற சிவாலயங்கள் இடித்துத் தள்ளப்பட்டன.இராமேஸ்வரம் போன்ற திருக்கோயிலைப் போன்ற அமைப்பு உடைய மக்கீஸ்வரம் என்ற சிவாலயம் இடிக்கப்பட்டு
மக்கா என்ற மசூதியாக்கப்பட்டது.இன்றும் மக்கா மசூதியில் ஏழு அடி உயரம் உள்ள லிங்கத்தைக் காணலாம்.மக்கீஸ்வரரான
லிங்கப் பரம்பொருளையே சைத்தான் என்று கூறி முகம்மதியர்கள் கல்லெறிகின்றனர்.(பக்கம் 282,283)
தமிழகத்திலுள்ள
ஊரான திருமால்பேறு போன்ற அமெரிக்காவிலுள்ள பேறு என்ற இடம் திருமால் சிவபூஜை செய்த தலமாகும்.பராசக்தி மயிலாக வந்து சிவபூஜை செய்த மயிலாபுரி,இன்று மயிலாப்பூராக(சென்னை) மருவியுள்ளது.நரசிம்மர் சிவபூஜை செய்த இடம் சிங்கபுரி.இந்த சிங்கபுரியே தற்போதைய சிங்கப்பூர் ஆகும்.(பக்கம் 350,351)
இலங்கைக்கு தெற்கே கன்னி,குமரி,காவிரி என்று ஒன்பது நதிகளும்,ஏழு மலைகளும் கொண்ட மகேந்திரமலை என்ற திருத்தலத்தில் வேதங்களும்,ஆகமங்களும் தோன்றி வளர்ந்து சிவமணம் கமழ்ந்து இருந்தது.ஈசன் அருளிச்செய்த
புண்ணிய வேத ஆகமங்கள் தோன்றிய தென்னகம் உலகிலேயே மிகவும் புனிதமான திசை என்று வடநாட்டிலிருந்து
வந்து தமிழ்த்தொண்டு புரிந்த திருமூலர் போற்றியுள்ளார்.
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல்
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறா நவதீர்த்தம் மிக்கு உள்ள வெற்பு ஏழுன்
பேறான வேத ஆகமமே பிறத்தலால்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே
(திருமந்திரம்)
மன்னு மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து
அருளியும் (திருவாசகம்)
என்று தெய்வத் திருமுறைகள் தென்னாட்டு வேதங்களையும்
ஆகமங்களையும் போற்றுகின்றன.திருக்கேதீஸ்வரம்,திருகோணமலை ஆகிய இலங்கைத் திருக்கோயில்களை
தேவாரப் பதிகங்கள் துதி செய்கின்றன.(பக்கம் 351)
ஆமூர்,தைமூர் என்ற தமிழ்நாட்டுத் திருத்தலங்களைப்
போன்றே தைமூர் என்ற தலம் ரஷ்யாவில் இருந்ததை இன்றும் வழங்குகின்ற இப்பெயர் எடுத்துக் காட்டுகின்றது.உக்கிரப்பாண்டியனுக்கும் உத்திரப்பிரதேசத்திலுள்ள கல்யாணபுரத்து
இளவரசிக்கும் நடைபெற்ற திருமணத்தில்
சீனா,சோவியத் ஆகிய நாடுகளிலிருந்தும் அரசர்கள் கலந்துகொண்டதை திருவிளையாடற்புராணங்கள் தெரிவிக்கின்றன.
ஜாவக நாட்டு மக்கள்(இன்றைய ஜாவா) தமிழ்நாட்டு சிவனடியார்களைப்
போற்றி வணங்கியதை மதுரைக்காஞ்சி
என்ற சங்க இலக்கியத்து தனிப்பாடல் தெரிவிக்கின்றது.
படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழில் புரியும் பரமசிவனைப் பிரம்மன்,விஷ்ணு,ருத்ரன் ஆகிய மூன்று தெய்வங்களும்
ஒன்றாக வந்து பூஜை செய்து தத்தமக்குரிய
உலகங்களையும்,வாழ்க்கையையும்,பதவிகளையும் பெற்றுக்கொண்ட திருத்தலமே திரியம்பகேஸ்வரம்.இவ்வாறு மூன்று மூர்த்திகளும்
ஒன்றாக வந்து மும்மூர்த்தி
நாயகனைப் பூஜை செய்த திருத்தலமே அமெரிக்காவில்
உள்ள திரிநாடு(த்ரிநாட்).
வட அமெரிக்காவில் கொலராடா என்ற ஆற்றங்கரையின்
அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப்பட்டுள்ளது.இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு
அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது.அலெக்சாண்டிரியாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
அயனீச்வரம் என்ற சிவலாயத்தைச்
சுற்றி உருவான நகரமே பிற்காலத்தில் அயர்லாந்தாக மாறியது.கிழக்கு பாரதத்தில் நாகளேச்சுரம்
பிற்காலத்தில் நாகலாந்து என்று மாறியது.பாபிலோனியா களிமண் பட்டயங்களில்
சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.சிவன் என்ற இந்த தமிழ்ப்பெயர் ஒரு மாதத்தின் பெயராகவும் இருந்தது.சிவ நாமங்களில் எல்சடை என்ற பெயர் புகழ்பெற்று விளங்கியது.எல் என்ற தமிழ்ச்சொல்லுக்கு இருள் என்று பொருள்.சடை என்பது ஜடா என்ற சமஸ்க்ருதச் சொல்லின் தமிழ்வடிவம்.எல்சடை என்றால் கரிய சடையுடையவன் என்று பொருள்.சிறிய ஆசியாவில் சிவன் என்ற பெயரில் ஒரு நகரம் உள்ளது.சிரியா நாட்டின் ஒரு நாணயத்தில் சிவவடிவம் உள்ளது.ஜப்பானில் சந்திகளிலும் சதுக்கங்களிலும்
சிவாலயங்களை நிர்மாணித்து வழிபட்டு வந்துள்ளனர். போர்னியா நாட்டுக்குகைகளிலிருந்து ஈசன் திரு உருவங்கள்கண்டெடுக்கப்பட்டுள்ளன.சுமத்திராவில்
பெரிய அளவிலான லிங்கப்பரம்பொருளும் அர்த்தநாரீஸ்வர
வடிவமும் கிடைத்துள்ளது.ஹர என்ற வடமொழிச்சொல்லும்
அப்பா என்ற தமிழ்ச்சொல்லும்
சேர்ந்து ஹரப்பா என்றாயிற்று.தென் இந்திய இசையின் ஒரு ராகப்பெயர் கனடா.இந்தப் பெயரில் ஒரு வல்லரசு நாடு இருப்பதை நாம் அறிவோம்;அமெரிக்காவிலுள்ள உருகுவே என்ற ஊரின் பெயர் ஒரு தமிழ்ச்சொல்.ஈரான் என்பது இரட்டைப்பசு என்று பொருள் தரும் தமிழ்ச்சொல்.ஈராக் என்பதற்கு இரட்டையுடல் என்ற தமிழ் அர்த்தம் உண்டு.பஞ்சாக்கை என்ற சிவத்தலத்தை அப்பர் தேவாரம் போற்றியுள்ளது.பஞ்சாக்கை என்பது இன்றைய பஞ்சாப் ஆகும்.சூரிநாம்,சகாரா,ருமேனியா,யமன்(ஏமன்),மங்கோலியா ஆகியவையெல்லாம் ஆரிய மொழிச்சொற்களாகும்.பிள்ளைப்பண் என்பதே பிலிப்பைன்ஸ்
ஆனது;ஓமன் என்பது ஓங்காரேஸ்வரனைக் குறிக்கும்;ஆப்கானிஸ்தானில் இருக்கும் ஜலால்கோட்,பாகிஸ்தானில்
இருக்கும் ஜெயில் கோட் ஆகிய பெயர்களில் கோட்டை என்ற தமிழ்ச்சொல் உள்ளது.
பாரதப்பெயர்கள்
எல்லாம் மூல உச்சரிப்பே தெரியாத வகையில் சிதைத்து வழங்கப்படுவது
இன்றும் இயல்பு.தூத்துக்குடி,கோழிக்கோடு போன்றவையெல்லாம்
டூட்டிகுரின்,காலிகட் என்றெல்லாம் மாற்றப்படுவழங்கப்படுவது போல,மேற்கூறியவைகளும் மாறியுள்ளன.ஆப்கானிஸ்தானின் பழைய பெயர் காந்தாரம்.இன்றும் இதிலுள்ள ஸ்தானம் என்பது சமஸ்க்ருதப் பெயர்.காந்தார நாட்டு இளவரசியே காந்தாரி.காந்தாரம்,பியந்தைக் காந்தாரம்,காந்தார பஞ்சமம் ஆகியவையெல்லாம்
தேவாரத் திருமுறைப் பண்களின் /ராகங்களின் பெயர்களாகும்.ப்ரம்மதேசம் என்பதே இன்றைய பர்மா.அகஸ்தீஸ்வரம் என்பதே இன்றைய ஆஸ்திரேலியா.திருச்செந்தூருக்கும் இலங்கைக்கும்
இடையே முழுகிப்போன தலமே கந்தமாதனம் ஆகும்.(பக்கங்கள் 354,355,356)
அது மட்டுமா? சிவபெருமான் உறையும் இடம் திருக்கையிலாயம் இமயமலைத் தொடரில் அமைந்திருக்கிறது.வருடம் தோறும் இங்கே செல்லும் பக்தர்களின் குழு அதிகரித்துக்கொண்டே செல்வதை,1960களில் சீனாவுக்கு வியப்பளித்திருக்கிறது;தனது இந்தியப் பிரதிநிதிகள்
மூலமாக திருக்கையிலாயத்தின் முக்கியத்துவம்,ஆன்மீகப்பெருமைகளை விசாரித்திருக்கிறது;திருக்கையிலாய மலை யாரிடம்(எந்த நாட்டிடம் இருக்கிறதோ,அந்த நாடு இந்த உலகத்தின் மகோன்னத நாடாக உயர்ந்துவிடும் என்பது சீனாவின் தலைமைக்குத் தெரிந்திருக்கிறது.1964 போர் மூலமாக நமது சிவபெருமானின் இருப்பிடமான திருக்கையிலாயத்தை கைப்பற்றிவிட்டனர்.இன்று?
நமது அப்பா சிவபெருமானின் இருப்பிடமான திருக்கையிலாயத்துக்குச் செல்வதற்கு நாமே பாஸ்போட் எடுத்துக்கொண்டும்,சீனாவின் விசாவுடனும் செல்ல வேண்டுமாம்.இதுவே இந்த திருக்கையிலாயம் ஒரு வேளை இஸ்லாமியரின்
புனித இடமாக இருந்திருந்தால்,இந்த காங்கிரஸ் கட்சி சும்மா இருந்திருக்குமா?
நாம் செய்ய வேண்டிய கடமை என்னதெரியுமா? நமது குழந்தைகளின் ஏழு வயதுக்குள் அடிக்கடி அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்;குடும்பத்தோடு அழைத்துச் சென்று நமக்குத் தெரிந்த அந்த கோவில் வரலாறு,அந்த தெய்வத்தின் பெருமைகள்,வழிபாட்டு முறைகளைச் சொல்ல வேண்டும்;
வீட்டில் நாம் தினமும் சில நிமிடங்களாவது கூட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும்;
பள்ளிப்படிப்பை
முடிக்கும்போது,நமது குழந்தைகளுக்கு ஸ்ரீஇராமக்ருஷ்ண மிஷன்,சின்மயா மிஷன்,விவேகானந்த கேந்திரம்,ராஷ்டீரிய ஸ்வயம் சேவக சங்கம்,ராஷ்டீரிய சேவிகா சமிதி போன்ற ஆன்மீக மற்றும் தேசபக்த அமைப்புகளின் பயிற்சி முகாம்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறைகள்,பனிரெண்டாம் வகுப்பு முழு ஆண்டு விடுமுறை,டிகிரி அல்லது டிப்ளமோ செமஸ்டர் விடுமுறைகளில்
அனுப்பி வைப்பதுடன் முடிந்தால் நாம் ஒவ்வொருவரும்
கலந்து கொள்ள வேண்டும்;இதன் மூலமாக நமது எதிர்கால சந்ததிக்கும் நமது இந்து தர்மத்தின் பெருமைகள் சென்றடையும்.நான் அப்படிப்பட்ட
பயிற்சிமுகாம்களில் அடிக்கடி கலந்து கொண்டதால் தான் நமது இந்துதர்மத்தின்
பெருமைகளை உணர்ந்தேன்.அப்படி உணர்ந்த ஒவ்வொரு கணமும் எனக்குள் நமது முன்னோர்களைப்பற்றிய பெருமிதம் உண்டானது;அதே சமயம்,எப்படி இப்பேர்ப்பட்ட சாதனைகளை நமது முன்னோர்கள் செய்தார்கள்? என்று சில நாட்கள் தூக்கம் கூட வரவில்லை;இதைப் பற்றி அறிந்துகொள்ளவே
நூலகங்கள்,வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்,ஜோதிடர்கள்,மந்திரவாதிகள்,
ஆன்மீகப்பேச்சாளர்கள்,ஜோதிட எழுத்தாளர்கள்,நாவல் எழுத்தாளர்கள்
போன்றவர்களை சந்திக்க ஆரம்பித்தேன்;சில நேரங்களில் அரசியல்வாதிகளையும் சந்தித்திருக்கிறேன்.நான் கேட்கும் கேள்விகளுக்கு
பொருத்தமில்லாத ஆனால் தந்திரமான பதில்களைத் தான் அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள்
தந்தார்கள்;மற்றவர்களோ எனது நோக்கத்தை புரிந்து கொண்டபின்னரே முறையான அதேசமயம் முழுமையான பதில்களையும்,விளக்கங்களையும்
தந்தார்கள்.
நிறையப்படித்தால்
தான் கொஞ்சம் எழுத முடியும் என்பது எழுத்தாளர்களுக்கான அரிச்சுவடி ஆகும்;எனவே,நிறைய்ய்ய்ய படிக்கத் துவங்கினேன்;சில சமயம்,நடிகைகளின் கவர்ச்சிப் படங்களை வெளியிடும் திரைக்கூத்து
போன்ற இதழ்களிலிருந்தும் கூட எனது தேடல்களுக்கான
விடை கிடைத்தது;எனவே,அதையும் தற்போதெல்லாம்
விட்டு வைக்கவில்லை;
தெய்வபக்தி இல்லாத தேசபக்தி நமது நாட்டின் அண்டை நாடுகளுக்கும்,நம்மோடு பழகி நமது செல்வ வளம்,மனித வளம்,ஆற்றல் வளங்களை கைப்பற்றும்
நாடுகளுக்கும் இருக்கின்றன.அதனால் தான் நாம் நவீன கொத்தடிமைகளாக
மாறிக்கொண்டிருக்கிறோம்; இனியும் நாம் நம்முடைய இந்துதர்மத்தின்
பெருமைகளை நமது அடுத்த தலைமுறைக்குச் சொல்லிக்கொடுக்காமல் விட்டுவிட்டால்,இந்த நூற்றாண்டு முடிவதற்குள் நமது நாட்டின் நிலை மட்டுமல்ல;நமது அடுத்த தலைமுறையின் சூழ்நிலையும் அதோகதிதான்!!!
இந்த இரண்டு கருத்தின் அடிப்படையிலேயே உலக அரசியலே செயல்பட்டுவருகிறது.
ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்