Monday, 3 March 2014

பிறந்த ராசிக்கேற்ற சித்தர் வழிபாட்டு ஸ்தலங்கள்

அசுவினி (மேஷம்) = ஸ்ரீபோகர்,பழனி
பரணி(மேஷம்)    = ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர்(நாகப்பட்டிணம்), ஸ்ரீபோகர்,பழனி
கார்த்திகை1(மேஷம்)=ஸ்ரீபோகர்,பழனி,ஸ்ரீதணிகைமுனி & ஸ்ரீசம்ஹாரமூர்த்தி,திருச்செந்தூர்;ஸ்ரீபுலிப்பாணி,பழனி
கார்த்திகை2,3,4(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்; ஸ்ரீவான்மீகர்,எட்டுக்குடி;ஸ்ரீஇடைக்காடர்,திரு அண்ணாமலை.
ரோகிணி(ரிஷபம்)=ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்,      ஸ்ரீலஸ்ரீசிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்,திருவலம்
மிருகசீரிடம்1,(ரிஷபம்)=சிவானந்த மவுனகுரு யோகீஸ்வரர்
மிருகசீரிடம்2(ரிஷபம்)=ஸ்ரீசட்டைநாதர்,சீர்காழி & ஸ்ரீரங்கம்
                    ஸ்ரீபாம்பாட்டி சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்
மிருகசீரிடம்3(மிதுனம்)=ஸ்ரீபாம்பாட்டி  சித்தர்,மருதமலை & சங்கரன்கோவில்
மிருகசீரிடம்4(மிதுனம்)=அமிர்தகடேஸ்வரர் ஆலயம்,திருக்கடையூர்
திருவாதிரை(மிதுனம்)=ஸ்ரீஇடைக்காடர் @ திரு அண்ணாமலை,ஸ்ரீதிருமூலர்@ சிதம்பரம்,ஸ்ரீஅமுதானந்தர் @ மணியாச்சி கிராமம்,ஸ்ரீசற்குரு @ எம்.சுப்புலாபுரம்,தேனிபகுதி.
புனர்பூசம்1,2,3(மிதுனம்)=ஸ்ரீதன்வந்திரி,ஸ்ரீவசிஷ்டர் @ வைத்தீஸ்வரன்கோவில்,
புனர்பூசம் 4(கடகம்)=ஸ்ரீதன்வந்திரி,வைத்தீஸ்வரன்கோவில்
பூசம்(கடகம்)=ஸ்ரீகமலமுனி,திருவாரூர்;ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி,  திருவாரூர்(மடப்புரம்)
ஆயில்யம்(கடகம்)=ஸ்ரீகோரக்கர்,வடக்குப்பொய்கைநல்லூர்,    நாகப்பட்டிணம் அருகில்;ஸ்ரீஅகத்தியர்,ஆதிகும்பேஸ்வரர்கோவில்,                   கும்பகோணம்;ஸ்ரீஅகத்தியர்,திருவனந்தபுரம்,பொதியமலை,பாபநாசம்.
மகம்(சிம்மம்),பூரம்(சிம்மம்)=ஸ்ரீராமதேவர்,அழகர்கோவில்,மதுரைஅருகில்.
உத்திரம்1(சிம்மம்)=ஸ்ரீராமத்தேவர்,அழகர்கோவில்,மதுரை அருகில்,ஸ்ரீமச்சமுனி,திருப்பரங்குன்றம்.
உத்திரம்2(கன்னி)=ஸ்ரீஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரா @ நெரூர்;
ஸ்ரீகரூவூரார் @ கரூர் பசுபதீஸ்வரர் கோவில்
ஆனிலையப்பர் கோவில் @ கருவூர்;கல்யாணபசுபதீஸ்வரர் கோவில் @ தஞ்சாவூர்.
அஸ்தம்(கன்னி)=ஆனிலையப்பர் கோவில் @ கரூவூர்,ஸ்ரீகரூவூரார் @ கரூர்.
சித்திரை1,2(கன்னி)=ஸ்ரீகருவூரார் @ கரூர்,ஸ்ரீசச்சிதானந்தர் @ கொடுவிலார்ப்பட்டி.
சித்திரை3,4(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்
சுவாதி(துலாம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மாயூரம்
விசாகம்1,2,3(துலாம்)=ஸ்ரீநந்தீஸ்வரர் @ காசி,ஸ்ரீகுதம்பைச்சித்தர் @ மயிலாடுதுறை
விசாகம்4(விருச்சிகம்)=ஸ்ரீகுதம்பைச் சித்தர் @ மயிலாடுதுறை,ஸ்ரீவான்மீகர் @ எட்டுக்குடி,ஸ்ரீஅழுகண்ணிசித்தர் @ நீலாயதாட்சியம்மன்கோவில்,நாகப்பட்டிணம்
அனுஷம்(விருச்சிகம்)= ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி, தவத்திரு.சிவஞான குருசாமிகள் என்ற அரோகரா சாமிகள்,தோளூர்பட்டி,தொட்டியம்-621215.திருச்சி மாவட்டம்.
கேட்டை(விருச்சிகம்)=ஸ்ரீவான்மீகி @ எட்டுக்குடி,     ஸ்ரீகோரக்கர் @ வடக்குப் பொய்கைநல்லூர்,நாகப்பட்டிணம் அருகில்.
மூலம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி @ ராமேஸ்வரம்,சேதுக்கரை,திருப்பட்டூர்
பூராடம்(தனுசு)=ஸ்ரீபதஞ்சலி  @ ராமேஸ்வரம்,ஸ்ரீசித்ரமுத்துஅடிகளார் @ பனைக்குளம்(இராமநாதபுரம்),ஸ்ரீபுலஸ்தியர் @ ஆவுடையார்கோவில்.
உத்திராடம்1(தனுசு)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீதிருவலம் சித்தர் @ திருவலம்(ராணிப்பேட்டை),ஸ்ரீலஸ்ரீமவுனகுருசாமிகள் @ தங்கால் பொன்னை(வேலூர் மாவட்டம்)
உத்திராடம்2,3,4(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி
திருவோணம்(மகரம்)=ஸ்ரீகொங்கணர் @ திருப்பதி,ஸ்ரீசதாசிவப்ரும்மேந்திரால் @ நெரூர்,      ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீகருவூரார் @ கரூர்,        ஸ்ரீபடாஸாகிப் @ கண்டமங்கலம்
அவிட்டம்1,2(மகரம்);அவிட்டம் 3,4(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்(திருமூலகணபதி சந்நிதானம்)
சதயம்(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,
ஸ்ரீசட்டநாதர் @ சீர்காழி,ஸ்ரீதன்வந்திரி,
ஸ்ரீதன்வந்திரி @ வைத்தீஸ்வரன் கோவில்.
பூரட்டாதி1,2,3(கும்பம்)=ஸ்ரீதிருமூலர் @ சிதம்பரம்,ஸ்ரீதட்சிணாமூர்த்தி @ திருவாரூர்.
ஸ்ரீகமலமுனி @ திருவாரூர்,ஸ்ரீகாளாங்கிநாதர் @ திருவாடுதுறை,சித்தர்கோவில்,சேலம் ஸ்ரீசதாசிவப்ரும்மானந்தஸ்ரீசிவபிரபாகர சித்தயோகி
பரமஹம்ஸர் @ ஓமலூர் & பந்தனம்திட்டா.
பூரட்டாதி4(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,ஸ்ரீஆனந்த நடராஜ சுவாமிகள் @  குட்லாம்பட்டி(மதுரை),
பரம்மானந்த ஸ்ரீசித்தயோகி பரமஹம்ஸர்,ஓமலூர்.
உத்திரட்டாதி(மீனம்)=சுந்தரானந்தர் @ மதுரை;ஆனந்த நடராஜ சுவாமிகள் @ குட்லாம்பட்டி(மதுரை),ஸ்ரீமச்சமுனி @ திருப்பரங்குன்றம்.
ரேவதி(மீனம்)=ஸ்ரீசுந்தரானந்தர் @ மதுரை,திபாவளிக்கு முந்தையநாள் அன்று குனியமுத்தூர் சுவாமிகள் என்ற சிவ சுப்ரமணிய சுவாமிகள் ஜீவசமாதி

ஆதாரம்:சித்தர் களஞ்சியம்,பக்கம்82,83,84,85.

சிவசித்தர் வர்மம் எனப்படும் நோக்கு வர்மம்:அடிப்படை உண்மைகள்


சிவன் வழியில் சித்தர்கள் தெரிந்துகொண்ட இந்த வர்மக்கலை மர்மமாகவும்,சூட்சுமரீதியாகவும் இன்றளவும் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது.ஆனால்,அதை எல்லா மக்களும் பயன்படுத்தும் வகையில் எளிமையாக யாரும் தர முன்வரவில்லை.வர்ம ஆசான்களால் ஒவ்வொரு விஷயங்களாக மறைக்கப்பட்டு மாணவர்களுக்கு போதிக்கப்பட்டது.


இந்த வர்மக்கலை சேர , சோழ, பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில் போர்க்கலையாக இருந்தது.இது எல்லோருக்கும் தெரிந்தால் நட்டில் தன்னைக் காத்துக்கொள்ள பயன்படுத்தாமல் ஒரு சிறிய பிரச்னைக்குக்  கூட இதைப் பயன்படுத்தி அழிக்க நினைப்பார்கள் என்ற எதார்த்தத்தின் காரணமாக ஆசான்கள் யாரும் எவருக்கும் முழுமையாகக் கற்றுத்தரவில்லை.

வர்ம ஆசான்கள் முதலில் மருத்துவத்தை மட்டுமே கற்றுக்கொடுத்தார்கள்.இதில் காயம்,வீக்கம்,ரத்தக்கட்டு,சுளுக்கு மற்றும் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு வியாதிகளுக்கு கஷாயம்,எண்ணெய்,தைலம்,குளிகை போன்ற மருந்து வகைகளைத் தயாரிக்கவும்,பயன்படுத்துமுறையையும் சொல்லிக்கொடுத்தார்கள்.இதில் முழுமையான பயிற்சியளிக்கவே மூன்று ஆண்டுகள் ஆகிவிடும்.
ஒரு மாணவன் முழு வர்மக்கலையும் அறிந்துகொள்ள 12 ஆண்டுகள் ஆகும்.அத்தனைக் காலங்கள் ஒரு மாணவன் பொறுமையோடு காத்திருந்தால் தான் ஒரு வர்மானியாக முடியும்.பொறுமையில்லாத மாணவர்கள் பாதியிலேயே செல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.புதிதாக ஆர்வப்பட்டு அதிகம் பேர் இதை நோக்கி வரவும் இல்லை.

வர்ம ஆசான்கள் இதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை;ஓர் உன்னதமான வர்மக்கலை கண்டவர்களிடம் எளிமையாக சென்று சேரக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள்.
இந்தக் கலையின் சூட்சுமத்தை சாதாரணமாக சொல்லிக் கொடுத்து,செல்வம் சேர்க்கவோ,பொருளீட்டவோ விரும்பவில்லை.ஆனாலும் அவர்கள் தேவையானதை இந்த வர்மக்கலையை சூட்சுமரீதியில் பயன்படுத்தி பலனடைந்தார்கள்.இதை யாரும் தடுக்க முடியாது.அது இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.இது தான் உண்மை.வர்மத்தை பயன்படுத்தி,என்னவெல்லாம் அடையலாம் என்று கேட்டால்,
1.ஒருவனை வீழ்த்த முடியும்- அதே சமயம் இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும்.
2.ஒருவனை பல்வேறு பிரச்னைகளில் சிக்க வைக்கமுடியும்.அதிலிருந்து விடுதலையாக்கவும் முடியும்.(அனுபவத்தில் கண்ட உண்மை)
3.வர்மக் கலையால் ஒரு காரியத்தில் செய்லவடிவத்தை முன்கூட்டியே உணரமுடியும்.(முன் உணர்வு)
4.மனிதனின் சகலவிதமான நோய்களில் இருந்து நிரந்தர தீர்வைப் பெறலாம்.
5.நியாயமான முறையில் என்னவெல்லாம் நினைக்கிறாயோ அதையெல்லாம் கண்டிப்பாக அடைய முடியும்.

உலகியல் நடைமுறையில் கண்திருஷ்டி என்று பலர் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.ஒரு சிலர் அதற்காக பரிகாரங்களையும் செய்துகொண்டு தான்  இருக்கிறார்கள்.என்ன பரிகாரம் செய்தாலும் அதை நிவர்த்தி செய்ய முடியாது.
ஏன் என்றால் உங்களுக்குப் பிடிக்காதவர்கள் ஓர் வக்ர பார்வையோடு உங்கள் குடும்பத்தையோ, தொழிலையோ,நிறுவனத்தையோ பார்க்கும்போது அங்குதான் நோக்கு வர்மம் 1/1000 மடங்கு அங்கே சாதாரணப் பார்வையில் செயல்படத்துவங்கும்.அதையே வாழ்க்கையில் நீங்கள் தாங்கமுடியாமல் திண்டாடிக்கொண்டிருப்பீர்கள்.அவ்வாறு மீண்டும் மீண்டும் பார்வைபடும்போது அதிலிருந்து உங்களால் எந்த வகையிலும் மீள முடியாது.இதிலிருந்து விடுதலை பெற வர்மக்கலையில் எந்திரங்கள்,மூலிகை,மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன.
மேலும்,சித்தர்கள் அடர்ந்த காடுகளில்,கொடிய விலங்குகளிடம் இருந்து தங்களை நோக்கு வர்மத்தை பயன்படுத்தியே காத்துக்கொண்டார்கள்.



இந்தக் கட்டுரையை ஜோதிடபூமி,பிப்ரவரி 2012 இல் பக்கம் 27 

திருநங்கைகளின் மனவேதனைகள் தீர ஒரு ஆன்மீக வழிகாட்டுதல்


விதி என்று ஒன்று இருந்தால் விதிவிலக்கு இருந்தே தீரும்;இந்த விதிவிலக்கு பெரும்பாலும் நன்மையளிப்பதாகவே இருக்கிறது.ஒரே ஒரு விதிவிலக்கைத் தவிர! மனித இனங்களில் ஆண்,பெண் என இரண்டே இரண்டு இனங்கள் இருந்தாலும்,பாதி ஆண்;மீதி பெண் அல்லது பாதி பெண்;மீதி ஆண் என்று சேர்ந்து ஒரு மனிதனையும் பிரம்மா படைத்துவருகிறார்;இவர்களுக்கு இந்த காலத்தில் திருநங்கை என்ற அடையாளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இருப்பினும்,இந்த திருநங்கைகளின் மனக்குமுறல்கள் பல நூற்றாண்டுகளாக வெளிப்படுத்திட வாய்ப்பே இல்லாமல் இருந்திருக்கிறது.நவீன தொழில்நுட்பம் நிறைந்த இக்காலத்தில்தான் இவர்கள் ஒருங்கிணைந்து செயல்படத்துவங்கியிருக்கின்றனர்.இருப்பினும்,இவர்களை இழிவாகவும்,கேவலமாகவும் பார்க்கும் நிலை இன்னும் மாறவேயில்லை;மேலும் இவர்களுக்கு மனம் என்ற ஒன்று இருக்கிறது என்பதையே பிற இனங்கள்(ஆண் இனம்,பெண் இனம்) உணருவதேயில்லை;அந்த அளவுக்கு இவர்களை இழிவுபடுத்துவது தொடர்கிறது.
மனுதர்மம் தொடங்கி,சுக்கிரநீதி வரையிலும் இருக்கும் புராதனமான தர்மநீதி நூல்களில் மனிதனின் வாழ்க்கை நெறிமுறைகள் பற்றி ஏராளமாக விவரிக்கப்பட்டுள்ளன;

எந்த ஒரு பெண்ணையும் அனாவசியமாக அழ வைத்தால்,அது கடுமையான தோஷமாக உருவெடுக்கும்;எந்த ஒரு பெண்ணையும் கட்டாயப்படுத்தி உறவு கொண்டாலும்,அதனால் ஏற்படும் பாவங்கள், பரிகாரத்தில் தீர்க்கமுடியாத பாவங்களின் பட்டியலில் இருக்கின்றன.அதே போலத்தான்,திருநங்கைகளை மனம் நோகடித்தாலோ,திருநங்கைகளை கதறியழுமளவுக்கு யார்  செய்தாலும் (ஆண் அல்லது பெண்) அவர்கள் பரிகாரத்துக்கு உட்படாத பிரம்மஹத்தி தோஷத்துக்கு ஆளாவார்கள்.அதன்விளைவாக,அவர்களின் குடும்பத்தில் அதேபோன்ற குழந்தைகள் (திருநங்கைகள்) பிறப்பார்கள்;மேலும்,இவ்வாறு நோகடிப்பவர்களுக்கு தொழிலில் அல்லது வேலையில் கடுமையான சிக்கல்கள் உண்டாகும்.அந்தச் சிக்கல்களைத் தீர்க்க யாராலும் முடியாது.ஏனெனில் ,இந்த சாபம் குறைந்தது ஏழு பிறவிகளுக்கு தொடரும்.
திருநங்கைகளின் மன வேதனைகள் தீர என்ன வழி?


அடாவடித்தனம் செய்வதில் திருநங்கைகளும் இருக்கிறார்கள்.இவர்களுக்கு இந்த வழிமுறை சிறிதும் பொருந்தாது;


சுமார் 17,50,000 ஆண்டுகளாக இருந்துவரும் கோவில் திருச்சிக்கு அருகில் உள்ள ஸ்ரீரங்கம் ஆகும்.இந்த மாதிரியான பிரம்மாண்டமான வருடக்கணக்கினை 5000 ஆண்டுகளில் நாகரீகமடைந்த ஆங்கிலேயர்களால் நினைத்துப்பார்க்கமுடியவில்லை;இருப்பினும் உண்மை என்பது எப்போதும் உண்மைதானே!


 ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன்,புதன் இந்த இரண்டு கிரகங்களும் உச்சமாக இருந்தாலோ,நீசமாக இருந்தாலோ அவர்கள் இந்த ஸ்ரீரங்கம் ரெங்கநாதப்பெருமாளை நிச்சயம் நேரடியாக வந்து தரிசிக்க வேண்டும்.சுக்கிரன் உச்சம் அல்லது நீசமாக இருக்கும்போது பிறந்தவர்கள்,குறைந்தது 6 வெள்ளிக்கிழமைகள்; அதிகபட்சம் 24 வெள்ளிக்கிழமைகளுக்கு வந்து சுக்கிரஓரையில் ஸ்ரீரெங்கநாதப்பெருமாளை தரிசிக்க வேண்டும்;


அதேபோல,புதன் உச்சம் அல்லது நீசமானாலோ அவர்கள் குறைந்தது 5 புதன் கிழமைகள்; அதிகபட்சம் 23 புதன்கிழமைகள் இங்கு வந்து புதன் ஓரையில் ஸ்ரீரெங்கநாதப்பெருமாளை வழிபட வேண்டும்.


சுக்கிரனும்,புதனும் ஒருவரது பிறந்த ஜாதகத்தில் கெட்டுப்போயிருந்தால்,அவர்களே திருநங்கைகள் ஆவர்.அவர்களுக்கும் இந்த ஆலயம் பரிகாரம் தரும் ஸ்தலம் ஆகும்.


யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத திருநங்கைகள்,ஏதாவது ஒரு சனிக்கிழமையன்று மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் திருச்சியின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரெங்கநாதப்பெருமாளை வழிபடவேண்டும்;அவ்வாறு வழிபடும்போது தனது பெயர்,பிறந்த நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்;அவ்வாறு செய்தபின்னர்,ஸ்ரீரங்கம் கோவிலின் உட்பிரகாரத்தில் அல்லது கடைசியாக இருக்கும் விசாலமான வெளிப்பிரகாரத்தினை 16 சுற்று சுற்றிவர வேண்டும்;அவ்வாறு சுற்றி வரும்போது,இதுவரை தனக்கு ஏற்பட்ட வேதனைகள்,ஏக்கங்கள் தீரவேண்டும் என்ற வேண்டுதலோடு சுற்றிவர வேண்டும்.அதன்பிறகு,கோவில் யானைக்கு கரும்பு அல்லது உணவுப்பொட்டலம் வாங்கித்தர வேண்டும்;


இவ்வாறு தொடர்ந்து எட்டு சனிக்கிழமைகள் மட்டும் செய்து வந்தாலே,அவர்களின் சகல விதமான வேதனைகளும்,ஏக்கங்களும் எட்டாவது வாரத்திலிருந்து 90 நாட்களுக்குள் தீர்ந்துவிடும்.
ஒருவேளை யானைக்கு தானம் செய்யமுடியாவிட்டால்,கோவிலுக்கு வெளியே மூன்று பேர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.



இந்த தெய்வீக ரகசியத்தை ஆராய்ந்து நமக்கு அருளியிருப்பவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் ஐயா ஆவார்.இது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க எந்த நாளாக இருந்தாலும் மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் 9677696967 என்ற எண்ணில் திரு.சகஸ்ரவடுகர் ஐயா அவர்களிடம் பேசலாம்.

பாரதப்பண்பாட்டைப் பாதுகாப்போம்;பரப்புவோம்;

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது;அதிலும் கூன்,குருடு,செவிடு நீங்கிப் பிறத்தல் அரிது;
புல்லாய்ப் பிரக்கினும் பாரதத்தில் பிறத்தல் அரிது என பெரியோர்கள் கூறியுள்ளனர்.
இந்துதர்மத்தின் சிறப்புகள்,விஞ்ஞான தத்துவங்கள்,உண்மை வரலாறுகள் சிறந்தோங்கிய நமது பண்பாடு,நமது வாழ்க்கை முறைகள்,பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம்,அனைத்தையும்(நதி,கோவில்,மரம்,காடு,இறந்த முன்னோர்கள்) தாயாகப் போற்றுகிற மரபு,நமது கலைகளான பரதம்,தப்பாட்டம்,கும்மிப்பாட்டு,கோலாட்டம்,சிலம்பாட்டம்,   கபடி,களரி,வர்மக்கலை;மற்றும் மதச் சுதந்திரம் இவற்றால் கவரப்பட்டு உலகமே நம்மை நோக்கி வரத்துவங்கியிருக்கிறது.இதிகாசங்களும்,புராணங்களும் விஞ்ஞானபூர்வமான உண்மைகளை தன்னுள் புதைத்து வைத்திருப்பதை மேல்நாட்டு இந்துவியலாளர்கள் கண்டறிந்துகொண்டே இருக்கின்றனர்.உலகம் முழுவதும்,ஐந்து கண்டங்களிலும்,200 நாடுகளிலுமிருந்து பல தரப்பட்ட அறிஞர்கள்,சிந்தனையாளர்கள்,விஞ்ஞானிகள் நமது இந்துதர்மத்தின் தத்துவங்களாலும்,கோட்பாடுகளாலும்,மனித நல செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு அதனுள் பொதிந்திருக்கும் ஆன்மீக அமுதங்களை அள்ளிப்பருக பாரதம் நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.(நாம் தான் அமெரிக்கா செல்வதைப் பெருமையாக நினைக்கிறோம்;உலக நாடுகள் பலவற்றின் மக்கள்,மேதைகள் பாரதம் வருவதையும்,பாரதப்பண்பாடான இந்துப்பண்பாட்டையும் அறிவதை தனது பிறவிநோக்கமாக நினைக்க ஆரம்பித்துள்ளனர்)
இருப்பினும்,பாரத நாட்டுமக்கள் தனது சொந்த தர்மமான இந்து தர்மத்தை விட்டு,வேறு மதத்திற்கு மாற்றப்படுவது படுவேகமாக நடந்துவருகிறது.வறுமையில் இருப்பவர்களுக்கு மூன்று வேளை சோறு போட்டும்,படித்த வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை வாங்கித் தந்தும்,நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ உதவிகள் செய்து குணப்படுத்துவதாலும்;வீடில்லாதவர்களுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுத்தும் மதமாற்றம் பேய்வேகத்தில் நடக்கிறது.இந்து தர்மத்தை முழுமையாக அறியாமல் தடுத்த மெக்காலேவின் நரித்தனத்தால்  99% இந்துக்களுக்கு இந்துதர்மத்தின் பெருமைகள் தெரியவில்லை;இதனால்தான் இன்று நம்மை ஆள்பவர்கள்,நம்மைச் சுரண்டுவதில் கிறிஸ்தவ ஆங்கிலேயனை விட பலமடங்கு முன்னேறிவிட்டார்கள்.புதிதாக மதம் மாறுபவர்களின் மனநிலையானது,இந்து தர்மத்தை அழிப்பதில்  வெகுவான ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.பிரச்னைகளை எதிர்கொள்ளும் பலவித டெக்னிக்குகள் இந்து தர்மத்தின் புராணங்கள்,உபநிஷத்துக்கள்,கதைகளில் இருக்கின்றன.அவைகளை பரவவிடாமல் தடுப்பதை தனது அரசியல் லட்சியங்களாக அனைத்து இந்திய அரசியல் கட்சிகளும் கொண்டுள்ளன.(விதிவிலக்காக சில அரசியல்கட்சிகளால் தான் இந்து தர்மம் இந்தளவுக்காவது நிம்மதியாக வாழ்கிறது).இதனால் பிரச்னைகளை எதிர்கொள்ளமுடியாமல் தவிப்பவர்கள்,சிறைக்கைதிகள் முதல் விபச்சாரிகள் போன்றோரை பொய்யான,பகட்டான வார்த்தைகளைச் சொல்லி,மெஸ்மரிசம் எனும் மனமயக்கத்தைச் செய்தும்,ஏமாற்றியும்,வெளிநாட்டு டாலர்களைக் காட்டியும் மதமாற்றிவருகின்றனர்.நமது பாரதத்தை கிறிஸ்துவ நாடாக மாற்றவேண்டும் என்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பல கோடி டாலர்கள் வசூலிக்கப்பட்டுவருகின்றன.
இந்துக்களில் 99% பேர்களுக்கு ஆன்மீக அடிப்படைக்கல்வி கிடைக்கவில்லை;இந்து தர்மத்தின்மீது நிஜமான பற்றும்,பக்தியும்,நம்பிக்கையும் இருக்கும் விதத்தில் ஆன்மீக அடிப்படைக் கல்வி தரவில்லை;நமது கோவில்களை தன்பிடியில் வைத்துள்ள அரசாங்கம்,கோவில்களில் இந்துதர்மக் கல்வியைத் தர நடவடிக்கை எடுக்கவில்லை;(மாறாக கோவில் உண்டியல் வசூலை அரசு ஊழியர்களுக்குச் சம்பளமாகத் தருகிறது.இது எப்பேர்ப்பட்ட பாவம்!)
பெண்களாகிய நாம் நமது குழந்தைகளுக்கும்,சிறுவர்களுக்கும்,மாணவ மாணவிகளுக்கும் இந்து சமயக்கல்வியைப் புகட்ட முயல வேண்டும்.நமது வீடுகளில்,தெருக்களில்,கோவில்களில் நாமாவளி,பஜனை,கூட்டு வழிபாடு மன்றங்களைத் துவக்குவோம்;தேசபக்தியும் தெய்வபக்தியும் வளர்க்கும் கதைகளைச் சொல்லிக் கொடுப்போம்;எல்லாப்பகுதிகளிலும் பெண்களை ஒன்றிணைத்து திருவிளக்குப் பூஜைகளைச் செய்வோம்; இந்து தர்மத்தின் வளர்ச்சிக்கு நாம் செய்ய வேண்டியது இவை மட்டுமே!!! 


குடும்பத்துடன் வாரம் ஒருமுறை கோவிலுக்குச் செல்லும் பழக்கத்தை கைவிடாமல் பார்த்துக்கொள்வோம்;

சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்

உலகையே காத்தருளும் சிவபெருமான், ஜோதிடர் ஒருவரை சித்தராக வந்து சோதித்த சம்பவம் தெரியுமா? பண்ருட்டி அருகே பாக்கம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கர் என்ற ஜோதிடர் வாழ்ந்து வந்தார். சிறந்த சிவபக்தரான இவர் தினமும் ஈசனை வணங்கிய பின்னரே ஜோதிடம் பார்க்க அமர்வார்.ஒருநாள் அருகிலுள்ள சித்தர் சாவடியில் இருந்து, ஒரு சித்தர் ஓலைச்சுவடிகளுடன் வந்தார். ‘சிவபூஜை முடிந்த பின்னரே ஜோதிடம் பார்க்க முடியும்’ என்று கணிக்கரின் உதவியாளர் கூறியதை ஏற்க மறுத்த சித்தர், அவசரப்படுத்தினார். 

அதிக பொன்னும் பொருளும் தருவதாக ஆசை காட்டினார்.ஆனாலும் கணிக்கர் மறுத்துவிட்டார். ‘‘யாராக இருந்தாலும் எவ்வளவு பொருள் கொடுத்தாலும், தான் அனுதினமும் வணங்கும் சிவபெருமானுக்கு பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் தொடங்குவதில்லை’’ என்று கூறினார். அதற்கு சித்தர், ‘‘சரி, பூஜையை முடித்துக்கொண்டு வாருங்கள்’’ என்று கூறி காத்திருந்தார். பூஜை முடிந்து வந்த கணிக்கரிடம், தன்னை வீரசித்தர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, சுவடிக்கட்டை கொடுத்து, ஜாதகம் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஜாதகக் கட்டை வாங்கிப் பார்த்த கணிக்கர், ‘‘இதில் எந்த குறையும் இல்லையே, வேறு என்ன சந்தேகம்?’’ என்று கேட்டார். சித்தரோ, ‘‘எனக்கு திருமணம் நடக்குமா? பிள்ளைப்பேறு உண்டா?’’ என்று கேட்டார். மறுபடியும் ஜாதகத்தை பார்த்த கணிக்கர், ‘‘சுவாமி, தங்களுக்கு ஜாதகப்படி திருமணம் நடந்து விட்டது, 2 பிள்ளைகளும் இருக்கிறார்கள்’’ என்று கூறினார். திடுக்கிட்ட வீரசித்தர், ‘‘நீர் என்னய்யா ஜோதிடர், அப்பட்டமான பொய் சொல்லி என்னை அவமானப்படுத்தி விட்டீரே! நானோ பிரம்மச்சாரி சித்தன். ஜோதிடம் கணிக்கத் தெரியாத உம்மிடம் வந்ததே நான் செய்த குற்றம்தான்’’ என்று கோபித்துக்கொண்டார்.கணிக்கரோ, ‘‘எனது கணிப்பில் இதுவரை பிழை ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாது’’ என்று கூற, வீரசித்தரோ, ‘‘பிழைதான்.

 இதை ஊர் முழுக்க கூறப்போகிறேன். சிவபூஜை செய்து அருள் மகிமையோடு ஜோதிடம் கூறுகிறேன் என்று மக்களை ஏமாற்றும் உம்மிடம் இனி யாரும் ஜாதகம் கணிக்க வரப்போவதில்லை’’ என்று ஆவேசத்துடன் கூறினார்.கணிக்கரோ, ‘‘சுவாமி நீங்கள் சித்தராக இருப்பதால் நான் ஆத்திரப்படாமல் கூறுகிறேன். உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி, மக்கள் இருக்கிறார்கள். உங்கள் ஜாதகம் அப்படித்தான் சொல்கிறது. இது நான் வணங்கும் சிவபெருமான் மீது சத்தியம்’’ என்று நிதானமாக கூறினார்.

வீரசித்தரோ, ‘‘நான் பற்றற்ற துறவி, மனைவி, மக்களுக்கு வாய்ப்பில்லை என்று சொல்லுங்கள். அதற்கு ஈடாக இந்த பொற்காசுகளை வைத்துக் கொள்ளுங்கள்’’ என்று பொற்காசுகளை ஜோதிடரிடம் நீட்டினார்.அதுவரை பொறுமையாக இருந்த கணிக்கர், ‘‘ஒருபோதும் நான் பொய் சொல்ல மாட்டேன். கணித்துக்கூறியது கூறியதுதான். தாங்கள் சாபமிட்டு, நான் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை’’ என்றார்.உடனே வீரசித்தர் ஜாதகச் சுவடியை மீண்டும் கணிக்கரிடம் கொடுத்து, ‘‘நீ தினமும் பூஜை செய்து வணங்கும் சிவபெருமான் திருமுன்பு இந்த சுவடியை வைத்து ‘நான் கணித்துக்கூறிய ஜாதகத்தில் தவறில்லை, பொய்யுமில்லை, அனைத்தும் உண்மைதான்’ என்று சத்தியம் செய்து விட்டு, பின்னர் ஓலைச்சுவடியை பிரித்துப்பார், உண்மை புரியும்’’ என்று கூறினார்.கணிக்கனார் அவ்வாறே ஓலைச்சுவடியை வாங்கி சிவலிங்கத்தின் முன்பு வைத்து கண்மூடி வணங்கினார். 

சிறிதுநேரத்தில் கண்திறந்து பார்த்தபோது என்ன ஆச்சரியம்! சுவடியில் இருந்த சாதக குறிப்புகள் அனைத்தும் மறைந்து போயிருந்தன. அதற்கு பதிலாக திருவதிகை வீரட்டானமுடைய மகாதேவர் என்று ஒவ்வொரு சுவடியிலும் இருந்தது.மெய்சிலிர்த்த கணிக்கர், வெளியே ஓடிவந்து பார்த்தபோது சித்தரைக் காணவில்லை. அப்போது அவர்முன் ஒரு பேரொளி தோன்றியது. சிவபெருமான் ரிஷபவாகனத்திலும் உடன் அம்மை, விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் என பஞ்சமூர்த்திகளும் காட்சியளித்தனர்.

மெய்சிலிர்த்து விழுந்து வணங்கிய கணிக்கனார், ‘‘எல்லாம் வல்ல பரம்பொருளே, இது என்ன சோதனை!’’ என்று கேட்டு நெகிழ்ந்தார். 

சிவபெருமான், ‘‘சோதனை அல்ல கணிக்கரே, உம் சாதனைகளை மெச்சவே வந்தோம். ஜோதிடம் கணிக்கும்போது உண்மையை கூற வேண்டும், பொய்கூறி பிழைத்தல் தவறு என்பதை உணர்த்திய உமக்கு அருள்புரிந்தோம். உமக்கு என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டார்.

அதற்கு கணிக்கர், ‘‘உலகையே கணிக்கும் பரம்பொருளே, நீங்கள் ஜோதிடம் கணிக்க வந்த இந்தத் திருவிளையாடலால் கணி ஈசராக, கணிச்சபுரீஸ்வரராக இவ்வூரில் கோயில் கொண்டு நாடி வருவோருக்கு நலம்புரிய வேண்டும். அவரவர் ஜாதகத்தை கொண்டு வந்து தங்கள் திருவடியில் வைத்து வணங்கி செல்வோருக்கு இடையூறுகளை போக்கி நன்மைகளை தந்தருள வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

  உடனே சிவபெருமான் கணிக்கரிடம், ‘‘இனி இவ்வூர் உன்பெயரால் கணிச்சப்பாக்கம் எனும் கணிச்சபுரி என்று விளங்கும். உன் ஜாதக கணிப்பில் நீ மென்மேலும் புகழ்பெற்று என் பதம் அடைவாய்’’ என்று ஆசியருளினார். 

  இந்த நிகழ்ச்சியை கேட்டறிந்த அரசன், கணிக்கனாரின் விருப்பப்படி கணீஸ்வரர் ஆலயத்தை நிர்மாணித்தார். 

 கணிச்சபுரீஸ்வரர், கணிச்சநாதர் என்று இந்த இறைவன் அழைக்கப்படுகிறார். இறைவியின் பெயர் பெரியநாயகி. தலவிருட்சம் வேங்கை மரமாகும். தற்போது சுயம்புவாக தோன்றிய வேம்பு மரம் உள்ளது. கோயில் சிவலிங்க அமைப்பை வைத்துப் பார்க்கும்போது இது 8&9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. 1200 ஆண்டுகளுக்கு முன்பு பிரசித்தி பெற்றிருந்தது. பல கல்வெட்டுகள் காலப்போக்கில் பகைவர்களால் அழிக்கப்பட்டிருக்கலாம்.  மிகப்பெரிய அளவில் கோயில் இருந்ததற்கான அடித்தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ராஜராஜசோழனின் மகன் முதலாம் ராஜேந்திரசோழன் இவ்வூரின் கிழக்கே பெரிய ஏரியை அமைத்துக் கொடுத்துள்ளான். திருவதிகை கோயிலின் முதல் பிராகாரத்தில் மடப்பள்ளி அருகில் தென்புற சுவரில் உள்ள கல்வெட்டில் இந்தத் தகவல் தெரியவருகிறது. 

  கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார், கணீஸ்வர பெருமான். கருவறையின் வெளியே இடதுபுறம் மயில்மேலமர்ந்த முருகப்பெருமானும் வலதுபுறம் விநாயகரும் அருள்பாலிக்கின்றனர். 
  அம்பாள் பெரியநாயகி, சுவாமிக்கு இடதுபுறம் தெற்கு நோக்கியபடி தனியே சந்நதி கொண்டருள்கிறாள். மண்டபத்தின் தென்கிழக்கே சூரியபகவானும் வடகிழக்கே சந்திர பகவானும் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரிய லிங்கம் அக்கினி லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. வடகிழக்கே தனி மண்டபத்தில் நவகிரகங்கள். அருகில் பைரவர் சந்நதி.

  கருவறையின் தென்புற சுவரில் அசுரனை வதம் செய்யும் தட்சிணாமூர்த்தியின் சுதைச் சிற்பமும், கீழே கருங்கல் சிலையும் உள்ளன. கோபுரத்தின் பின்புறம், சங்கு&சக்கரத்துடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். வடக்குப்புறத்தில் பிரம்மனும், அருகில் தனி சந்நதியில் சண்டிகேஸ்வரரும் எதிரே துர்க்கையும் காட்சியளிக்கின்றனர். கருவறையின் பின்புறமுள்ள வேப்பமரத்தடியில் கடவுளர்கள் சிலைகளும் நாகர் சிலையும் உள்ளது. இவற்றை பெண்கள் மிகவும் பயபக்தியுடன் வணங்கி செல்கிறார்கள்.   

  கணிச்சப்பாக்கம் ஊரின் நடுவில் உள்ள தண்ணீர் தொட்டியின் அருகில் சிதைந்த சிவலிங்கம் ஒன்று உள்ளது. ஆரம்பத்தில் அதைத்தான் மக்கள் வழிபட்டு வந்துள்ளனர். பின்னர் பெரிய லிங்கம் கிடைத்தவுடன் அதற்கு கோயில் எழுப்பி வழிபடுகின்றனர். இருந்தும் வெளியூர்வாசிகள் இங்கு வரும்போது பழைய லிங்கத்தை வழிபட்ட பின்னரே கோயிலுக்குள் செல்கின்றனர். இங்கு நந்தியும், அருகில் சமண தீர்த்தங்கரரின் சிற்பமும் காணப்படுகின்றன. 9&10ம் நூற்றாண்டில் திருவதிகையில் பௌத்த மதம் வளர்ச்சி அடைந்தபோது இந்த தீர்த்தங்கரர் சிலை அமைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள்.

  சில ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்ட கலெக்டராக இருந்த ககன்தீப்சிங் பேடி இங்கு ஒரு விழாவுக்கு வந்தபோது நிலம் சீரமைத்த பொதுமக்கள், இங்கு கிடைத்த சிவலிங்கத்தை எடுத்து வழிபட்டனர். அவரும் தரிசனம் செய்து கோயில் அமைக்க ஏற்பாடு செய்தார். அதன் பின்னர் இக்கோயில் எழுப்பப்பட்டுள்ளது. 1200 வருடங்களுக்கு முன்பிருந்த கோயில் சிதிலமடைந்து மறைந்துபோய் சில வருடங்களுக்கு முன்புதான் தெரிய வந்திருக்கிறது. பெரிய அளவில் கோயிலை உருவாக்க வேண்டுமென்பது இவ்வூர் மக்களின் எதிர்பார்ப்பு. திருப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

  திருமணத்தடை, குழந்தையின்மை, தீராத நோய், தொழில் முடக்கம், குடும்ப பிரச்னை உள்ளிட்ட எந்த பிரச்னை என்றாலும் கணீஸ்வர பெருமான் அவற்றை தீர்த்து வைப்பார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். குறிப்பாக ஜாதகம் பார்க்கச் செல்பவர்கள், சென்று விட்டு வந்தவர்கள் இந்த கோயிலில் வந்து வழிபட்டால் ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் வீரியம் குறைந்து மன நிம்மதி அடைவார்கள் என்பது ஐதீகம்.

  பண்ருட்டியில் இருந்து 7 கி.மீ. தொலைவில் கணிச்சப்பாக்கத்தில் இந்தக்கோயில் உள்ளது. மினிபஸ் வசதி உண்டு. ஆட்டோவிலும் செல்லலாம்.

சித்தர்கள் வருகைக்கான அறிகுறி

கி.பி.2006 ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவை மையமாகக் கொண்டு சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை உலகின் பல நாடுகளைத் தாக்கியது;இதற்கு புவியியல் வல்லுநர்கள் பெரிய பெரிய விளக்கங்களைக் கொடுத்தனர்;ஆனால்,முன்கூட்டியே அவர்களால் எப்போது,எங்கே  ஆழிப்பேரலை வரும்? அது எந்த நாடுகளைத் தாக்கும்? என்பதை கணிக்கமுடியவில்லை;தமிழினத்தின் ஆதி இருப்பிடமான குமரிக்கண்டம்,இன்றைய இலங்கைக்குத் தெற்கே சுமார் 2000 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கும்,சுமார் 24,000 கிலோ மீட்டர்கள் அகலத்திற்கு(கிழக்கே ஆஸ்திரேலியாவிலிருந்து மேற்கே ஆப்ரிக்கா வரையிலும்) பரவியிருந்தது.மனதின் சக்தியை முழுமையாக பயன்படுத்துவதில் நமது தமிழினம் தேர்ச்சிபெற்றிருந்தனர்;இன்றைய திரைப்படமான ஏழாம் அறிவில் காட்டப்படும் நோக்கு வர்மத்தின் பரம்பரை நாம் மட்டுமே!!! 



இன்றும் ஒரு சில ஆன்மீகக் குழுவினருக்கு நோக்கு வர்மம் தெரியும்;இந்த குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர்களையும்,குமரிக்கண்டத்தையும் ஆழிப்பேரலை தாக்கியது.இன்றைய சேலம் போன்று இருந்த கன்னியாகுமரி,தற்போது முக்கடலும் சந்திக்கும் இடமாக உருவாகி,ஓராயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன.


2006 ஆம் ஆண்டில் வந்த ஆழிப்பேரலைக்கு ஆன்மீகரீதியான காரணம் தினத்தந்தியில் முழுப்பக்க கட்டுரையாக வெளிவந்தது.கடலுக்குள் காகபுஜண்டர் என்னும் சித்தர் பல லட்சம்(?!?) ஆண்டுகளாக தவம் செய்துவந்தார்;கடலோரம் நிகழ்ந்த காமக் குற்றங்களால்,அவர் கோப ஆவேசத்தோடு எழுந்தார்;அதனால்,ஆழிப்பேரலை என்னும் சுனாமி வந்தது.அதன்பிறகு, கி.பி.2010இல் சித்தர்களின் வீடாகிய சதுரகிரியில் சித்தர்களின் மாநாடு நடைபெற்றது.இதன் முடிவாக சித்தர்களின் ஆசி பெற்ற ஒருவன்,இந்தியாவின் தலைமை பீடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவான்;அவனது ஆட்சிக்காலத்தில் இந்து தர்மம் உலகம் முழுவதும் பரவும் என்று அடிக்கடி செய்திகளாக பல ஜோதிட இதழ்களில் வெளிவந்தது.குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம்.ராஜகோபால் ஐயா அவர்கள் கூட இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அதில்,
“வட நாட்டைச் சேர்ந்த ஒரு மாவீரன்,தென் நாட்டைச் சேர்ந்த ஒரு துறவியிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறான்.அவன் வெகுவிரைவில் இந்தியாவை ஆளத் துவங்குவான்;அவனது ஆட்சி சர்வாதிகார ஆட்சியாக இருக்கும்;அதே சமயம்,அவனது ஆட்சியில் நேர்மையாக வாழ்ந்து வருபவர்கள் போற்றப்படுவார்கள்;அக்கிரமம்,அநீதி செய்தவர்கள் அனைவரும் மீளமுடியாத கஷ்டத்துக்கு ஆளாகப் போகிறார்கள்”

Friday, 28 February 2014




ஜோதிடம் பார்க்கும் போது,ஜோதிடராகிய நாம் நம்மையறியாமலேயே சில பலன்களை சொல்வது வழக்கம்;அதாவது ஜோதிட விதிகளை மீறியோ அல்லது ஜோதிட விதிகளுக்கு எதிராகவோ பலன்களைச் சொல்வது வழக்கம்;இது ஒவ்வொரு ஜாதகம் பார்க்கும்போதும் நம்மையறியாமல் பலன் சொல்வது இயல்பு.இப்படிப்பட்ட சூழ்நிலை அடிக்கடி வந்தால் நம்மிடம் ஏதோ ஒரு தெய்வீக சக்தி/முன்னோர்களின் ஆவி/குலதெய்வ அருள்/முன்னோர்களின் அருள் நமது உள்ளுணர்வின் மூலமாக வெளிப்படத் துவங்கியிருப்பதாக அர்த்தம்.


அடிக்கடி நாம் வானில் பறப்பதாக கனவு வந்தால் இப்பிறவியில் நமக்கு ஒன்று அல்லது ஒருசில தெய்வீக சக்திகள் கிடைக்கப் போவதாக அர்த்தம்.ஆதாரம்:ஆன்மீக ஆராய்ச்சிகள்.


தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று வந்தாலே நமது உள்ளுணர்வு சக்தி அதிகரிக்கும்;8.8.2004 இந்த தேதியன்று நான் வசிக்கும் தெருவிற்கு பக்கத்து தெருவிற்குச் சென்றேன்.அங்கே ஒரு அம்மன் கோவில் இருந்தது;அன்று காலையில் தான் எனது நண்பனின் அம்மாவை அவரது வீட்டில் சந்தித்தேன்; ‘தம்பி,நம் கணேசனுக்கு நீதான் பொண்ணு பார்க்கணும்’ என்று அவனது பிறந்த ஜாதக நகலைக் கொடுத்தார்.அந்த ஜாதக நகலுடன் நான் இந்த அம்மன் கோவிலுக்கு வந்தேன். கோவிலானது தெருவிற்குள் வீடுகளுக்கு நடுவே அமைந்திருந்தது.அப்போது சரியாக மதியம் 2.30 ! அம்மனை வழிபட்டுவிட்டு,அங்கே இருந்த சந்தனக் கிண்ணத்தில் இருந்து சந்தனத்தை எடுத்து அந்த ஜாதக நகலின் நான்கு மூலைகளிலும் தடவிவிட்டு,சில நிமிடம் உட்கார்ந்திருந்தேன்.கோவிலில் யாரும் இல்லை;


கோவிலை விட்டு வெளியே வந்தேன்.நான்கு பேர்கள் எதிர்ப்புறத்தில் இருந்து வந்தனர்;அந்த நான்குபேர்களில் ஒருவர்,என்னுடன் 12 ஆம் வகுப்பு வரை படித்தவன். அவனிடம், ‘இந்தத் தெருவில் திருமணத்தரகர் என்று யாரும் இருக்கிறாங்களா?’ என்று கேட்டேன். அவன், தன்னுடன் வந்த ஒருவரைக் காட்டி, ‘இதோ இவர் தான் கல்யாணத் தரகர்’ என்றான். எனக்கோ இன்ப அதிர்ச்சியாக இருந்தது.அவரிடம் அந்த ஜாதக நகலைக் கொடுத்து, மறுநாள் அவரை அழைத்துச் சென்று நண்பனின் அம்மாவிடம் அறிமுகப்படுத்தினேன்.


அதே சமயம்,இந்த சம்பவம் யாதார்த்தமாக நிகழ்ந்ததா? இல்லை இந்த அம்மன் கோவிலுக்குப்போய்விட்டு வந்ததால் நிகழ்ந்ததா? என்ற கேள்வி உடனே எனக்குள் எழுந்தது.இதை எப்படி கண்டுபிடிப்பது?தினமும் ஒரு கோரிக்கையோடு இந்த அம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டுப் பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தேன்.
அந்த நாள் தான் 8.8.2004! அன்றிலிருந்து இன்று 1.3.2014 வரை ஒரு நாள் விடாமல் இந்த அம்மன் கோவிலுக்குச் சென்று வருகிறேன்.ஆமாம்! இதனால் வாழ்க்கை விறுவிறுப்பாகவும்,நிம்மதியாகவும்,மனமகிழ்ச்சியாகவும் மாறத் துவங்கிவிட்டது.


8.9.2004க்குள்ளாகவே,அதாவது ஒரு மாதத்திற்குள்ளாகவே என்னுடன் பழகுபவர்களில் என் மீது அக்கறையாக இருப்பவர்கள் போல நடித்துக் கொண்டு எனக்கு தவறான வழிகாட்டுபவர்களின் நோக்கங்கள் எனக்குப் புரிந்தன;அதே சமயம்,என்னைத்தீட்டிக்கொண்டே இருந்தவர்கள் என் மீது எந்த அளவுக்கு உண்மையான அக்கறையும் அன்பும் கொண்டிருந்தார்கள் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.இதற்கு அந்த அம்மனை தினமும் வழிபட்டு வந்ததே காரணம்.


ராகு மஹாதிசை நடந்தாலோ,நமது லக்னாதிபதி ராகுவின் நட்சத்திரத்தில் நின்றாலோ,நமக்கு இப்போது நடைபெறும் திசைக்குரிய கிரகம் ராகுவின் நட்சத்திரத்தில் நின்றாலோ அல்லது ராகுவுடன் சேர்ந்து நின்றாலோ புலனாய்வுத்திறன் கைக்கூடும்; எனது புலனாய்வுத் திறனை இப்படித்தான் பக்திக்குத் திருப்பும் விதமாக எனது வாழ்க்கை அமைந்தது.ஓரிரு ஆண்டுகளில் அம்மாவைக் கேட்காமல்(பூ கட்டிப்பார்ப்பது) எந்த காரியமும் செய்வதில்லை என்ற அளவுக்கு உயர்ந்தேன்.
பல நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மூலமாக திரும்பத் திரும்ப அந்த அம்மனின் சக்தியை புரிந்துகொண்டதால், என்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் அம்மனைத் தினமும் வந்து தரிசிக்கும்படி வலியுறுத்தத் துவங்கினேன். பிளாக்கரை கூகுள் வாங்கி,யார் வேண்டுமானாலும் இணையத்தில் எழுதலாம் என்ற சூழ்நிலை உருவானதும், இணையத்தில்  எப்படி இந்த அம்மனின் அருளைப் பெற்றேன்? என்பதை தொடராகவே எழுதத் துவங்கினேன்.

எனது வீட்டில் இருந்து புறப்படத் துவங்கியதும்,வீட்டு வாசலைத் தாண்டியதும் எனது மனதிற்குள் ‘வராதே’ என்ற வார்த்தை மட்டும் தோன்றும்.உடனே, நான் நினைப்பேன்; அம்மா நம்மை சோதித்துப்பார்க்கிறாள்; அவள் சொன்னாலும் அவளை தரிசிக்காமல் வேலைக்குப் போகக் கூடாது என்ற எண்ணத்துடன் பக்கத்துத் தெருவில் அமைந்திருக்கும் அந்த அம்மன் கோவிலுக்குச் செல்வேன். போய்ப் பார்த்தால், அந்தத்  தெருவில் அன்று யாராவது இறந்திருப்பார்கள்; அதனால் கோவில் பூட்டப்பட்டிருக்கும்; அப்போதும் மனதிற்குள் ஒரு பெருமையே தோன்றும்; நம்மை மகனாக நினைப்பதால் தான் அம்மா நமது நேரத்தை வீணடிக்காமல் இருக்க வராதே என்று சொல்லியிருக்கிறாள் என்று நினைத்து வாசலில் நின்றே வழிபட்டுவிட்டு வேலைக்குப் போயிருக்கிறேன்.இந்த மாதிரியான சம்பவம் பல தடவை நிகழ்ந்திருக்கிறது.

நான் வசிக்கும் தெருவிலேயே ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது.அவர்களுக்கு என்னைப்போலவே இரு மகள்கள்! அந்தக் குடும்பம் ஒருமுறை ஜாதகம் பார்க்க வந்தது. அவர்களில் ஒரு மகளுக்கு ராகு மஹாதிசை அப்போது தான் துவங்கியிருந்தது.எனவே,அவர்களை இந்த அம்மன் கோவிலுக்கு தினமும் சென்று வரும்படி ஜோதிடம் சொன்னேன்.

ஒருமாதம் கழிந்தது.மீண்டும் அதே குடும்பத்தினர் அந்த அம்மன் கோவிலுக்கு ஒரே ஒரு நாள் சென்றதால் ஏற்பட்ட அதிசயத்தைச் சொன்னார்கள். முதல் நாள் குடும்பத்துடன் கோவிலுக்கு இரவு 7 மணிக்குச் சென்றிருக்கிறார்கள். சென்றுவிட்டு வீடு திரும்பியதும்,வீட்டு வாசலில் அந்த இல்லத்தரசியின் அப்பா ஒரு மஞ்சள் பையுடன் காத்துக் கொண்டிருந்தார். அவரை இவர்கள் வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.

“நீ இனிமே வட்டி கட்ட வேண்டாம்.இந்தா நீ கேட்ட ரூ.50,000/-  நீ எனக்கு வட்டி தர வேண்டாம்.இதைக்கொண்டு அந்த கடனை அடை.உன்னால் எப்போ முடியுமோ அப்போ இந்த அம்தாயிரத்தைத் தந்தால் போதும்” இந்த இல்லத்தரசிக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது; ஆனால்,அந்த ஒரு நாளுக்குப்பிறகு அவர்கள் எவருமே அந்த அம்மன் கோவிலுக்குப் போகவில்லை;

ஒழுங்காக வேலைக்குப் போய்க் கொண்டிருந்த தனது கணவனை கட்டாயப்படுத்தி,பெட்டிக்கடை துவங்க வைத்திருக்கிறாள் அந்த இல்லத்தரசி.தொழிலின் நெளிவு சுழிவு தெரியாததால், ஒரே ஆண்டுக்குள் கடன் ரூ.50,000/-வந்து விட்டது. அதை அடைக்க ஒருவரிடம் ரூ.50,000/-கடன் வாங்கி,அதற்கு நான்கு ஆண்டுகளாக வட்டி கட்டிக்கொண்டிருக்கின்றனர்.வீட்டில் இருந்த இல்லத்தரசி வேலைக்குப் போக ஆரம்பி,கணவன் மீண்டும் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறான்.கணவனின் சம்பளம் அப்படியே முழுசாக வட்டிக்குப் போக மனைவியின் சம்பளத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த கஷ்டமான சூழ்நிலையை தனது அப்பாவிடம் சொல்லியிருக்கிறாள் அந்த இல்லத்தரசி.சொல்லி அப்பாவிடமே ரூ.50,000/-கடன் கேட்டிருக்கிறாள்.இப்படி அவள் கேட்டு,கேட்டே அப்பாவுக்கும்,மகளுக்கும் ஒரு கட்டத்தில் சண்டையே வந்து இருவரும் பேசிக்கொள்வதில்லை; இந்த சூழ்நிலையில் தான் எம்மிடம் ஜோதிடம் பார்த்து ஒரே ஒரு நாள் அந்த அம்மனின் கோவிலுக்குச் சென்று, அதே அப்பா தனது இறுதி கால சேமிப்பை மகளின் கடனை அடைக்கக் கொடுத்திருக்கிறார்.

இந்த அம்மன் கோவிலில் ஒவ்வொரு மஹாசிவராத்திரியன்றும் இரவில் ஒரு பாட்டி வெறும் கையால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவார்.அப்படி சுட்ட அப்பத்தை அம்மனின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து பக்தர்களுக்குப் பரிமாறுவது 400 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் நடைமுறை.இந்த அம்மன் கோவில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெரு என்ற தெற்குப்பட்டியில் அமைந்திருக்கிறது.இந்த அம்மனின் பெயர் பத்திரகாளியம்மன்.3000 நெசவாளர் குடும்பங்களுக்கு குலதெய்வமாகத் திகழ்ந்து வருகிறது.கேட்டவர்களுக்கு கேட்டவரம் தருபவளே இந்த பத்திரகாளியம்மன்!!!